Kayal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற கயல் சீரியலில், கயலுக்கும் குடும்பத்துக்கு மட்டும் தொடர்ந்து ஏகப்பட்ட பிரச்சனை வந்து கொண்டே இருக்கிறது. ஆனாலும் கயல், குடும்ப பாரங்களை சுமந்து கொண்டு வருகின்ற ஒவ்வொரு பிரச்சினைகளையும் சரி செய்து குடும்பத்தை காப்பாற்றிக் கொண்டு வருகிறார். தற்போது கயலுடன் சேர்ந்து எழிலும் தியாகியாகி முழு நேரமும் கயல் குடும்பத்தை பாதுகாக்கும் காவலனாக இருக்கிறார்.
அந்த வகையில் தேவியை கடத்துட்டு போனது சுப்ரமணியன் தான், ஆனால் சுப்பிரமணியனுக்கு பின்னாடி இருந்து எல்லா வேலைகளையும் செய்தது செங்குட்டுவன் தான் என்ற உண்மையை கண்டுபிடித்து விட்டார்கள். இன்னொரு பக்கம் பெரியப்பா, இதுவரை கயல் குடும்பத்தை அளிக்க வேண்டும் என்று ஏகப்பட்ட தில்லாலங்கடி வேலையை பார்த்திருக்கிறார்.
ஆனால் எப்பொழுது கயல், கல்யாணத்தில் அனைவரது முன்னாடியும் பெரியப்பா காலில் விழுந்து மன்னிப்பு கேட்டாரோ, அப்பொழுதே முழுமையாக பெரியப்பா திருந்தி விட்டார். அந்த வகையில் கயல் குடும்பத்திற்கு ஆலமரமாக பெரியப்பா நின்று நிழல் கொடுத்துக் கொண்டிருக்கிறார். தற்போது கயல் குடும்பத்துடன் சரணடைந்த பெரியப்பா ஒட்டுமொத்த பாசத்தையும் காட்டி வருகிறார்.
ஆனாலும் பெரியம்மா மட்டும் திருந்தாமல் கயல் குடும்பத்தை விரோதியாக நினைத்துக் கொண்டு வருகிறார். இப்படி ஒட்டுமொத்தமாக அனைவரும் இருக்கும் சமயத்தில் அன்பு போலீசாக வேண்டும் என்ற ஆசை நிறைவேறும் வகையில் அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் வந்துவிட்டது. அந்த ஆர்டரை பார்த்து குடும்பத்தில் இருப்பவர்கள் சந்தோஷப்பட்டு கொள்கிறார்கள்.
ஆனால் பெரியம்மா மட்டும் வயிற்று எரிச்சலில் கொந்தளிக்கிறார். அதனால் சந்தோஷத்தை கெடுக்க வேண்டும் என்பதற்காக சும்மா இருந்த எழிலை சீண்டிவிடும் விதமாக எல்லோரும் ஒவ்வொரு வேலை பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். ஆனால் எழில் மட்டும் எந்த வேலைக்கும் போகாமல் வீட்டோடு மாப்பிள்ளையாக இருக்கிறார் என்று அவமானப்படுத்தி பேசி விடுகிறார்.
இதனால் நொறுங்கிப் போன எழிலுக்கு எப்படி ஆறுதல் சொல்வது என்று தெரியாமல் கயல் முழித்துக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் கயல் மற்றும் எழிலின் சங்கடத்தை புரிந்து கொண்ட மூர்த்தி புதுசாக ஒரு வேலையை சொல்லி எழிலை பார்க்க சொல்லலாம் என்று கயலிடம் சொல்கிறார். ஆனால் கயலுக்கு மூர்த்தி சொன்ன வேலை மீது பிடிப்பில்லை.
ஏனென்றால் எழிலின் கௌரவத்தை குறைக்கும் விதமாக எந்த வேலையும் பார்க்க கூடாது என்ற தீர்மானத்தில் கயல் இருப்பதால் மூர்த்தியிடம் வேண்டாம் என்று மறுப்பு சொல்லி விடுகிறார். ஆனால் எழிலோ யாருக்கும் தெரியாமல் சாதாரண வேலை தான் பார்த்து வருகிறார். ஆனால் கயல் கண்டுபிடித்து எழிலுக்கு ஏற்ற ஒரு நல்ல வேலையில் உட்கார வைத்து விடுவார். அத்துடன் இன்னும் ஒரு சில வாரங்களில் கயல் சீரியல் முடியப்போகுவதாக தகவல் வெளியாகி வருகிறது.