வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

தண்டவாளத்தில் குடையை விரித்து உல்லாசம் செய்த நபர்.. அதிர்ச்சியில் ட்ரைனை நிறுத்திய லோகோ பைலட்

“மல்லாக்க படுத்து விட்டத்தை பாக்குறது எவ்வளவு சுகம்.. அதுவும் தண்டவாளத்தில், வெய்யில் படாமலிருக்க குடையை விரித்து படுப்பத்தில் என்ன ஒரு காத்தோட்டம்.”ஷபா.. யார்ரா நீங்க” என்று தலையில் தான் அடித்து கொள்ள தோன்றுகிறது.. சில நாட்களுக்கு முன்பு நடந்த இந்த விநோதத்தை பார்த்து வியக்கத்தவர்களே இல்லை.

“தண்டவாளத்தில் தலை வைத்துப் படுப்பது” என்றாலே தற்கொலைக்கு முயலுவதாக நாம் எண்ணிக்கொள்கிறோம். தண்டவாளத்தில் இப்படி வசதியாகவும் நிம்மதியாகவும் தூங்க முடியும் என்று நிரூபித்திருக்கிறார் இந்த மனிதன்.. வினோதமான மனிதர்கள் வசிக்குமிடம் உத்திரபிரதேசம். அங்கு தான் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. இதை பார்த்த நெட்டிசன்கள். “அவர் அடித்த brand எனக்கும் வேண்டும்” என்று நக்கல் செய்து வருகின்றனர்.

உத்தரப்பிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் சென்றுகொண்டிருந்த ரயிலின் லோகோ பைலட், தண்டவாளத்தில் ஒரு மனிதர் சொகுசாகக் குடைபிடித்துப் படுத்திருப்பதைப் பார்த்து ரயிலை நிறுத்தியுள்ளார். பின்னர் அந்த மனிதரை எழுப்பி அவரைத் தண்டவாளத்திலிருந்து இறக்கும் வரை பயணிகளுடன் ரயில் நிறுத்தி வைக்கப்பட்டது.

அந்த நடுத்தர வயது மனிதர் தற்கொலைக்கு முயலவில்லை எனக் கூறப்படுகிறது. அந்த நபர், தன் வீட்டு படுக்கையறையும், தண்டவாளத்தையும் ஒப்பிட்டு confuse ஆகி உள்ளார். இந்த சம்பவம் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு நடந்துள்ளது. இன்றுவரை இந்த நபரை சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்து வருகின்றனர்.

Trending News