Persu Movie : வைபவ், சுனில் ரெட்டி, விடிவி கணேஷ், சந்தான பாரதி, தீபா ஷங்கர் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி இருந்தது பெருசு. இந்த படத்தை அறிமுக இயக்குனர் இளங்கோ ராம் இயக்கியிருந்தார்.
பெருசு படம் இறந்து போன அப்பாவை வைத்து அடல்ட் காமெடி படமாக எடுத்து ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்திருந்தது. இந்த படம் தியேட்டரில் மார்ச் 14-ம் தேதி வெளியாகி இருந்தது.
பொதுவாகவே தியேட்டரில் வெளியான படங்கள் ஒரு மாதத்திற்கு பிறகு ஓடிடியில் வெளியாகி வருகிறது. பெருசு படத்தை தியேட்டரில் பார்த்து மகிழ்ந்த ரசிகர்கள் எப்போது ஒடிடிக்கு வரும் என்று காத்திருந்தனர்.
ஒடிடியில் வெளியாக உள்ள பெருசு
அவர்களுக்கு செம ட்ரீட் ஆக விரைவில் இப்படம் ஒடிடிக்கு வர இருக்கிறது. நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி நிறுவனம் பெருசு படத்தை கைப்பற்றி இருந்தது. அந்த வகையில் ஏப்ரல் 11 ஆம் தேதி ஸ்ட்ரீமிங் செய்ய உள்ளது.
அதோடு கன்னடம், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியாக இருக்கிறதாம். வித்தியாசமான கதைகளத்துடன் எடுத்த இந்த படம் ஒடிடியில் அமோக வரவேற்பை பெறும் என்பதில் சந்தேகம் இல்லை.
புத்தாண்டு விடுமுறையில் ஒருபுறம் தியேட்டரில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியாகிறது. மேலும் வீட்டில் நேரத்தை செலவிடுபவர்கள் கண்டிப்பாக ஒரு முறையாவது பெருசு படத்தை பார்த்து மகிழலாம்.