15 வருட காதல், கீர்த்தி சுரேஷின் திருமணம் எப்போது தெரியுமா.? வைரலாகும் மாப்பிள்ளையின் புகைப்படம்

keerthy-suresh
keerthy-suresh

Keerthy Suresh : கீர்த்தி சுரேஷ் விரைவில் திருமண வாழ்க்கையில் இணைய உள்ள செய்தி அவரது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மிகவும் எதார்த்தமான நடிகையான கீர்த்தி சுரேஷுக்கு எக்கச்சக்க ரசிகர்கள் இருக்கிறார்கள். விஜய், சூர்யா என பல டாப் நடிகர்களுடன் நடித்துள்ளார்.

இப்போது அட்லீ தயாரிப்பில் வருண் தவானுக்கு ஜோடியாக பாலிவுட்டில் பேபி ஜான் என்ற படத்தில் நடித்து வருகிறார். தமிழில் வெளியான தெறி படத்தின் ரீமேக் ஆன இந்த படம் வருகின்ற கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

இதே டிசம்பர் மாதத்தில் தான் கீர்த்தி சுரேஷின் திருமணமும் நடக்க இருக்கிறது. கிட்டதட்ட 15 வருடங்களாக இவர்களது நட்பு தொடங்கி காதலாக மலர்ந்து வருகிறது. அதாவது ஆண்டனி தட்டில் என்பவர் கொச்சியில் உள்ள கல்லூரியில் இளங்கலை படித்துக் கொண்டிருந்தார்.

கீர்த்தி சுரேஷ் வருங்கால கணவரின் புகைப்படம்

keerthy-suresh-antony
keerthy-suresh-antony

அப்போது உயர்கல்வி பள்ளியில் கீர்த்தி சுரேஷ் படித்துள்ளார். இந்த சூழலில் இருவரும் நண்பர்களாக பழகி வந்த நிலையில் ஒரு கட்டத்தில் காதலர்களாக மாறி இருக்கின்றனர். மேலும் ஆண்டனி தட்டில் பிசினஸ்மேனாக இப்போது இருந்து வருகிறார். இவர்களது திருமணம் வருகின்ற டிசம்பர் மாதம் 12ஆம் தேதி கோவாவில் நடக்க இருக்கிறது.

இதில் இரு குடும்பங்களின் உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே பங்கு பெற இருக்கிறார்கள். அதன் பிறகு சென்னையில் பிரம்மாண்டமாக ரிசெப்ஷன் நடத்த உள்ளனர். கீர்த்தி சுரேஷை பற்றி நிறைய கிசுகிசுக்கள் வெளியாகி இருந்தது. இசையமைப்பாளர் அனிருத்தை கீர்த்தி சுரேஷ் திருமணம் செய்து கொள்வதாகவும் செய்திகள் வெளியானது.

ஆனால் ஆண்டனி தட்டிலை தன் பள்ளி பருவத்தில் இருந்து கீர்த்தி சுரேஷ் காதலித்து வருவது பலருக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது. மேலும் கீர்த்தி சுரேஷ் தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ திருமண அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம். இப்போது ஆண்டனி தட்டில் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement Amazon Prime Banner