வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

நார்வேயில் த்ரிஷாவுடன் ஜாலி பண்ணும் தளபதியின் புகைப்படம்.. இது நம்ம லிஸ்ட்லயே இல்ல

Vijay-Trisha: நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஜய், த்ரிஷா இருவரும் லியோ படத்தின் மூலம் இணைந்திருக்கின்றனர். கில்லி உள்ளிட்ட பல படங்களில் ஜோடியாக நடித்திருந்த இவர்களின் கெமிஸ்ட்ரி திரையில் நன்றாகவே ஒர்க் அவுட் ஆனது. அதுவே இவர்களை ரசிகர்களின் ஃபேவரைட் ஜோடியாகவும் மாற்றியது.

அந்த வகையில் லியோவில் இவர்களின் கெமிஸ்ட்ரியை பார்ப்பதற்கு ரசிகர்கள் இப்போது பெரும் ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த சூழலில் வெளிநாட்டில் விஜய், த்ரிஷா இருவரும் ஜோடியாக இருப்பது போன்ற ஒரு போட்டோ தற்போது வெளியாகி உள்ளது.

Also read: லண்டன்னு சொல்லிட்டு நார்வே போன விஜய்.. மொத்த நெருப்பையும் கொளுத்தி போட்டு குளிர் காயும் நம்பர் நடிகை

லியோ படப்பிடிப்பை முடித்துள்ள விஜய் அடுத்ததாக வெங்கட் பிரபுவுடன் தளபதி 68 படத்தில் இணைய இருக்கிறார். அதற்கு முன்பாக சிறு பிரேக் எடுத்துக்கொண்டு ஜாலி பண்ணும் விஜய் இப்போது நார்வேயில் இருக்கிறார். ஆனால் அவருடன் த்ரிஷாவும் இருப்பது தான் ஆச்சரியம்.

அந்த வகையில் வெளிநாட்டில் த்ரிஷா, விஜய் இருவரும் ஜோடியாக செல்வது போன்ற போட்டோ இப்போது இணையதளத்தில் கசிந்துள்ளது. அதில் த்ரிஷா கூலிங் கிளாஸ், ஹேண்ட் பேக் என ஸ்டைலான தோற்றத்தில் ஷாப்பிங் செல்வது போன்று காணப்படுகிறார்.

Also read: கேப்டனுக்கு மகனாக நடிக்க விஜய் வாங்கிய சம்பளம்.. இப்ப 120 கோடி என்பது அசுர வளர்ச்சி தான்

அதேபோன்று விஜய்யும் ஒரு பேக் மாட்டிக்கொண்டு கேஷூவல் லுக்கில் இருக்கிறார். இருவரும் ஒன்றாக இணைந்து செல்லும்படியாக அந்த போட்டோ இருக்கிறது. இதை பார்த்த ரசிகர்கள் இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே, ஜோடியாக இரண்டு பேரும் ஜாலி பண்ணுகிறார்களா என கேட்டு வருகின்றனர்.

ஏற்கனவே இந்த ஜோடியை பற்றி பல கிசுகிசுக்கள் வெளிவந்திருக்கிறது. அதில் தற்போது வெளிவந்துள்ள இந்த போட்டோ எரியுற நெருப்பில் எண்ணெய் ஊற்றிய கதையாக மாறி இருக்கிறது. அந்த வகையில் த்ரிஷாவுடன் ஜாலி பண்ணும் விஜய்யின் இந்த போட்டோ மீடியாவை கலக்கிக் கொண்டிருக்கிறது.

த்ரிஷாவுடன் ஜாலி பண்ணும் விஜய்

trisha-vijay
trisha-vijay

 

Trending News