Varalakshmi: வரலட்சுமி, நிக்கோலாய் சச்தேவ் திருமணம் கடந்த 2ம் தேதி தாய்லாந்தில் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து நேற்று மாலை சென்னையில் இவர்களின் திருமண வரவேற்பை சரத்குமார் மிகவும் பிரம்மாண்டமாக நடத்தி இருந்தார்.
ஏற்கனவே இவர்களுடைய திருமண அழைப்பிதழை அவர் பிரதமர் மோடி, தமிழக முதல்வர் ஸ்டாலின் உட்பட பல அரசியல் பிரபலங்களுக்கும் கொடுத்திருந்தார். அதேபோல் திரைத்துறையில் இருக்கும் அத்தனை பிரபலங்களுக்கும் நேரில் சென்று பத்திரிக்கை வைத்தார்.
இப்படி மகள் கல்யாணத்தை பார்த்து பார்த்து செய்த சரத்குமார் திருமணத்திற்கு முன்பு சங்கீத், மெஹந்தி கொண்டாட்டம் என அனைத்தையும் ஜோராக நடத்தினார். அதன்படி திருமணத்திற்கு முன்பு நடந்த ரிசப்ஷன் விழாவிற்கு ரஜினி, திரிஷா உட்பட பல பிரபலங்கள் வந்திருந்தனர்.
அதேபோல் திருமணம் முடிந்து நடந்த ரிசப்ஷனுக்கும் முதல்வர் ஸ்டாலின், உதயநிதி, தெலுங்கு நடிகர் பாலையா, வெங்கடேஷ், பிரபுதேவா, குஷ்பூ, சுந்தர்.சி, மணிரத்தினம், சுகாசினி, ஓ பன்னீர்செல்வம் என பல பிரபலங்கள் நேரில் வந்து வாழ்த்து தெரிவித்தனர்.
மகள் கல்யாணத்தை ஜோராக நடத்திய சரத்குமார்
திருமண புகைப்படங்கள் எதுவும் வெளிவராத நிலையில் இந்த ரிசப்ஷன் போட்டோக்கள் தற்போது இணையத்தை கலக்கி கொண்டிருக்கின்றன. அதில் வரலட்சுமி, நிக்கோலாய் இருவரும் பல லட்சம் மதிப்புள்ள உடையணிந்து அழகாக இருக்கின்றனர்.
அதேபோல் திருமணம் நடந்த சந்தோஷமும் பூரிப்பும் அவர்கள் முகத்தில் தெரிகிறது. இவர்களுக்கு போட்டியாக சரத்குமார், ராதிகா இருவரும் பளிச் என்ற உடையில் ஜொலிக்கின்றனர்.
அதேபோல் சரத்குமாரின் முன்னாள் மனைவி மற்றும் இளைய மகள் ஆகியோரும் கலக்கல் உடையணிந்து போஸ் கொடுத்துள்ளனர். இப்படியாக வரலட்சுமி திருமண ரிசப்ஷன் கோலாகலமாக நடந்து முடிந்திருக்கிறது. அவர்களுக்கு ரசிகர்கள் தங்கள் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
பிரம்மாண்டமாக நடைபெற்ற வரலட்சுமியின் ரிசப்ஷன்
- சரத்குமாரால் சங்கர் பட வாய்ப்பை இழந்த வரலட்சுமி
- வரலட்சுமி திருமண கொண்டாட்ட வைரல் புகைப்படங்கள்
- நாங்க டெய்லி உழைச்சா தான் சம்பளம் ஆக்ரோஷமான வரலட்சுமி