
அஜித்துக்கு சமீபத்தில் பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டிருந்தது.

அதை அவருடைய ரசிகர்கள் கொண்டாடி வந்த நிலையில் இன்று விருது வழங்கும் விழா நடைபெற்றது.

அதற்காக நேற்று அஜித் தன்னுடைய மனைவி மற்றும் பிள்ளைகளுடன் டெல்லி சென்றார்.

ரசிகர்களும் அவர் விருது வாங்க போகும் தருணத்தை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருந்தனர்.

அதை அடுத்து தற்போது அவர் குடியரசு தலைவர் கையால் இந்த விருதை பெற்றுள்ளார். அதை ஷாலினி பூரித்து போய் பார்க்கும் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.