
தனுஷின் 54ஆவது படத்தை போர்த்தொழில் இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்குகிறார்.

இதன் அறிவிப்பு வெளிவந்த நிலையில் தற்போது பூஜை புகைப்படங்கள் வெளியாகி இருக்கிறது.

வேல்ஸ் இன்டர்நேஷனல் ஃபிலிம்ஸ் சார்பில் ஐசரி கணேஷ் இப்படத்தை தயாரிக்கிறார். இந்த பூஜையில் தனுஷ் கலந்து கொண்டுள்ளனர். ஆனால் நாயகி மமிதா பைஜூ வரவில்லை.

இதைவிட இன்னொரு சர்ப்ரைஸ் இருக்கிறது. அதாவது வெற்றி மாறனும் இந்த பூஜையில் கலந்து கொண்டிருக்கிறார்.

சமீபத்தில் தனுஷ், வெற்றிமாறன் சர்ச்சை பெரிய அளவில் பேசப்பட்டது. ஆனால் அது அனைத்தும் வதந்தி என விளக்கம் தரப்பட்டது.

இந்த சூழலில் தனுஷ் வெற்றிமாறன் இணைந்திருக்கும் போட்டோ படு வேகமாக வைரலாகி வருகிறது.