நடிகர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர் என பல பரிமாணங்களை கொண்டு கலக்கி வந்த விஜய் ஆண்டனி இப்போது இயக்குனராகவும் உருவெடுத்துள்ளார். அந்த வரிசையில் அவர் இயக்கி நடித்துள்ள பிச்சைக்காரன் 2 நேற்று பெரும் ஆரவாரத்துடன் வெளியானது. ஏற்கனவே இதன் பிரமோஷன் களைகட்டிய நிலையில் படத்தை காணவும் ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருந்தனர்.
அவர்களின் எதிர்பார்ப்பை இப்படம் பூர்த்தி செய்ததா என்று கேட்டால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். ஏனென்றால் இதன் முதல் பாகமாக வெளிவந்த பிச்சைக்காரன் மிகப்பெரிய அளவில் சாதனை படைத்தது. இன்று வரை விஜய் ஆண்டனிக்கு அப்படம் ஒரு அடையாளமாகவும் இருக்கிறது.
Also read: பிச்சைக்காரனா இல்ல மொக்கைக்காரனா.? அனல் பறக்கும் விஜய் ஆண்டனி பட ட்விட்டர் விமர்சனம்
அதனாலேயே இந்த இரண்டாம் பாகம் எப்படி இருக்கும் என்ற ஆவல் அனைவருக்கும் இருந்தது. ஆனால் படம் இப்போது கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. அதிலும் முதல் பாகம் அளவுக்கு இல்லை என்ற கருத்துக்கள் தான் அதிகமாக வெளிவந்து கொண்டிருக்கிறது.
மூளை மாறாட்டம் என்ற புதுமையான கான்செப்ட் படத்தில் இருந்தாலும் படம் எதிர்பார்த்த அளவுக்கு ரசிகர்களை கவரவில்லை. அதனாலேயே இப்போது படம் குறித்த சுவாரசியமும் குறைந்திருக்கிறது. அந்த வகையில் 20 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் முதல் நாளிலேயே தட்டு தடுமாறி தான் வசூல் பெற்று இருக்கிறது.
Also read: முதல் பாக மேஜிக் விஜய் ஆண்டனிக்கு கை கொடுத்ததா.? பிச்சைக்காரன் 2 எப்படி இருக்கு? முழு விமர்சனம்
அதன் அடிப்படையில் பிச்சைக்காரன் 2 முதல் நாளில் வெறும் 2 கோடி மட்டுமே வசூலித்திருக்கிறது. இது பலருக்கும் அதிர்ச்சியை கொடுக்கும் விஷயம் தான். ஏனென்றால் இப்படத்தின் ட்ரெய்லரே மிகப்பெரும் ஆர்வத்தை தூண்டியிருந்தது. அதை தொடர்ந்து படத்திற்கான ப்ரோமோஷன் கூட விறுவிறுப்பாக இருந்தது.
இதையெல்லாம் வைத்து படம் வசூல் சாதனை புரியும் என்று நினைத்த வேளையில் இவ்வளவு குறைவான கலெக்சனை பார்த்திருப்பது பட குழுவினரை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. இந்த சூழலில் விஜய் ஆண்டனி போட்ட காசை எடுத்து விடுவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இனிவரும் நாட்களில் பிச்சைக்காரன் 2 எந்த அளவுக்கு வசூல் வேட்டை நடத்தும் என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
Also read: பிச்சைக்காரன் வெளியான 24 மணி நேரத்தில் இப்படி ஒரு சம்பவமா? விஜய் ஆண்டனி சார் என்ன இதெல்லாம்