வெள்ளிக்கிழமை, ஜனவரி 3, 2025

பொங்கல் ரேஸில் ஜல்லிக்கட்டு காளை மாதிரி 3 ஹீரோக்கள் படம்.. கப் அடிக்க போறது யாரு?

பண்டிகை நாட்களில் படங்களில் ரிலீஸே தனிதான். குறிப்பாக தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகையில் விடுமுறை என்பதால் மக்கள் அலைகடலென தியேட்டருக்கு வருவர். இதனால் வசூல் பல மடங்கு கூடும். தியேட்டர் அதிபர்களுக்கும், பட தயாரிப்பாளருக்கும் லாபம் கூடும். இந்த நிலையில் வரும் பொங்கல் பண்டிகைக்கு எந்த படங்கள் ரிலீசாகவுள்ளது என்பதைப் பார்க்கலாம்.

விடாமுயற்சி:

அஜித்குமாரின் படங்களுக்கு எப்போதுமே தனி கிரேஸ் உண்டு. மகிழ்திருமேனியின் கூட்டணியில் அஜித் முதன் முறையாக இணைந்திருக்கிறார் என்பதால் இன்னும் கூடுதல் கவனம் பெற்றுள்ளது விடாமுயற்சி படம். இப்படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா,அர்ஜூன், பிரியா பவானி சங்கர், ஆரவ், உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
இப்படத்தை லைகா தயாரிக்க, அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்த ஆண்டின் பெரிய எதிர்பார்பை ஏற்படுத்தியிருக்கும் இப்படத்தின் அப்டேட்டை அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் டொனால்ட் டிரம்பிடம் கேட்டு அஜித் ரசிகர்கள் அதிர்ச்சியளித்தனர். இந்த நிலையில் வரும் இப்படத்தின் ரிலீஸ் எப்போது என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வரும் வரும் பொங்கல் பண்டிகையொட்டி ஜனவரியில் இப்படம் ரிலீஸாகவுள்ளதாக தகவல் வெளியாகிறது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

vidaamuyarchi

சூர்யா 44

சூர்யா- கார்த்திக் சுப்புராஜ் காம்போ யாருமே எதிர்பார்க்கவில்லை. ஆனால் அமைந்துவிட்டது. இந்தக் கூட்டணியில் கேங்ஸ்டர் பாணியில் உருவாகி வரும் சூர்யா 44 படம் இப்போதே எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. இதில், சூர்யாவுடன் இணைந்து பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ், ஜெயராம், நாசர் பிரேம் குமார், உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.

இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். ஸ்ரேயாஷ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்கிறார். சூர்யா இதுவரை இல்லாத இளமையான கெட்டப்பில் நடித்து வரும் இப்படத்தின் ஷூட்டிங் உள்ளிட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. பொங்கலுக்கு அஜித்தின் விடாமுயற்சி படத்துடன் மோதவுள்ளதால் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


suriya44
வீர தீர சூரன்

சேதுபதி, சித்தா படங்களை இயக்கிய அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் விக்ரமின் 62 வது படம் வீர தீர சூரன். இப்படத்தில் விக்ரமுடன் இணைந்து எஸ்.ஜே.சூர்யா, துஷரா விஜயன், சித்திக் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். இப்படத்தை எச்.ஆர். பிக்சர்ஸ் சார்பில் ரியா ஷிபு தயாரிக்கிறார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். 10 நாட்கள் ஒத்திகை பார்க்கப்பட்டு எடுக்கப்பட்டுள்ள இப்படம் 2 பாகங்களாக உருவாகவிருப்பதாக தகவல் வெளியானது. அதன்படி, இப்படத்தின் முதல் பாகம் வரும் பொங்கல் பண்டிகையொட்டி வெளியாகவுள்ளது.

மூன்று முன்னணி நடிகர்களின் படங்கள் ரிலீஸ்:

சினிமாவில் அஜித், விக்ரம் சூர்யா ஆகிய 3 நட்சத்திரங்களின் படங்கள் பொங்கலுக்கு ரிலீஸாவதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதில், 3 ஹீரோக்களின் படங்களுக்கும நல்ல கதை, பிரபல பிரபல இயக்குனர்கள் என்ற அடிப்படையில், இப்படங்களில் எந்தப் படம் பொங்கல் ரேஸில் ஜெயித்து அதிக வசூல் குவித்து பாக்ஸ் ஆபீஸில் ஹிட் அடிக்கும் என்று இப்போதே ரசிகர்கள் எதிர்பார்க்க தொடங்கிவிட்டனர்.

ரசிகர்களை திருப்தி படுத்தினால் நிச்சயம் சூர்யா 44, விடாமுயற்சி, வீரன் தீரன் சூரன் ஆகிய 3 படங்களும் ஹிட்டாவதற்கு வாய்ப்புள்ளது. நீண்ட நாட்கள் கழித்து முன்னணி ஹீரோக்கள் படங்கள் பண்டிகை ரேஸில் மோதுவதால் இப்படங்களை பார்க்கவும் அதன் ரிசல்டை தெரிந்துகொள்ளவும் சினிமா விமர்சகர்காள் தயாராகி வருகின்றனர்.

Trending News