Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

அன்றே கணித்த சுசித்ரா.. போ..தை பார்ட்டி நடத்தியதாக சொன்ன நடிகர்களின் லிஸ்ட்

அன்றே கணித்த சுசித்ரா.. போ..தை பார்ட்டி நடத்தியதாக சொன்ன நடிகர்களின் லிஸ்ட்

Suchithra: அன்றே கணித்தார் என்பது போல இப்போது நடந்து கொண்டிருக்கும் விஷயங்களை எல்லாம் ஆறு மாதத்திற்கு முன்பே சுசித்ரா பேசியிருந்தார். திரை நட்சத்திரங்கள் கலந்து கொள்ளும் விழாக்களில் போ…தை பொருட்கள் சரளமாக பயன்படுத்தப்படுவதாக ஆறு மாதத்திற்கு முன்பு சுசித்ரா […]

Suchithra: அன்றே கணித்தார் என்பது போல இப்போது நடந்து கொண்டிருக்கும் விஷயங்களை எல்லாம் ஆறு மாதத்திற்கு முன்பே சுசித்ரா பேசியிருந்தார்.

திரை நட்சத்திரங்கள் கலந்து கொள்ளும் விழாக்களில் போ…தை பொருட்கள் சரளமாக பயன்படுத்தப்படுவதாக ஆறு மாதத்திற்கு முன்பு சுசித்ரா ஒரு பேட்டியில் சொல்லி இருந்தார். அந்த சமயம் இந்த விஷயம் இந்த அளவில் கவனம் இருக்கவில்லை.

அன்றே கணித்த சுசித்ரா

ஆனால் தற்போது நடிகர் ஸ்ரீகாந்த் கைதான பிறகு தான் என்ன இவர் போ…தைப்பொருள் பயன்படுத்தினாரா என ஆச்சரியப்படுகிறார்கள்.

அது மட்டும் இல்லாமல் இவரை விசாரிக்கையில் நிறைய பெரிய நடிகர்களின் பெயரும் வெளியே வரப் போகிறது என்று தகவல் வெளியானதில் இருந்து யார் அந்த நடிகர்கள் என எல்லோருக்கும் அதிக எதிர்பார்ப்பு வந்து விட்டது.

சுசித்ரா அப்போது தன்னுடைய பேட்டியில் அவருடைய முன்னாள் கணவர் கார்த்திக் உட்பட தனுஷ், அனிருத் என்று தொடங்கி கமலஹாசன் வரை இழுத்து விட்டிருந்தார். இந்த கைதுக்கு பிறகு கூட சுசித்ரா சமீபத்தில் ஒரு பேட்டி கொடுத்திருக்கிறார்.

அதில் தமிழ் சினிமாவின் யாரெல்லாம் போ…தைப்பொருள் உபயோகிக்கிறார்கள் என்ற கேள்வியை கேட்காதீர்கள்.

உண்மையில் யாரெல்லாம் உபயோகப்படுத்தவில்லை என்று தான் கேட்க வேண்டும். அந்த அளவுக்கு போ…தைப்பொருள் உபயோகப்படுத்தாதவர்களின் எண்ணிக்கை மிக மிகக் குறைவு என பெரிய குண்டை தூக்கி போட்டு இருக்கிறார்.

சில வருடங்களுக்கு முன்பு கர்நாடகா சினிமா இண்டஸ்ட்ரியில் ஒரு பெரிய நடிகர்கள் கூட்டம் இது போன்ற ஒரு சர்ச்சையில் சிக்கி கைதானது. தற்போது அதே விஷயம் தான் தமிழ் சினிமாவில் நடந்து கொண்டிருக்கிறது.

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.