புதன்கிழமை, ஜனவரி 15, 2025

ரசிகர்களின் மனதில் ரீங்காரமாய் ஒலிக்கும் ‘சின்னக்குயில்’ சித்ராவின் 7 பாடல்கள்.. சம்பளம் மற்றும் சொத்து விவரம் தெரியுமா?

Happy Birthday Chitra: சின்னக்குயில் சித்ரா பாடகியாக இருக்கட்டும், தனிப்பட்ட வாழ்க்கையாக இருக்கட்டும் அவரை பிடிக்காது என்று சொல்வதற்கு ஆள் கிடையாது. சித்ரா என்ற உடன் கண்டிப்பாக நமக்கு அவர் பாடிய இந்த ஏழு பாட்டுக்கள் மனதில் வந்து போகும். அந்த ஏழு பாட்டுக்களை பற்றி பார்க்கலாம்.

‘ஒவ்வொரு பூக்களுமே’: ஆட்டோகிராப் படத்தில் இடம்பெற்ற ஒவ்வொரு பூக்களுமே பாடல் சித்ராவின் சினிமா கேரியரிலும் முக்கியமான ஒன்று. கவிஞர் பா விஜய்யின் வரிகளில் இந்த பாட்டு பெரிய ஊக்கத்தை கொடுக்கக் கூடியது. அதிலும் சித்ராவின் குரலில் கேட்கும் போது இன்னும் மெய்சிலிர்க்க வைக்கும்.

இதுதானா: விக்ரம் மற்றும் த்ரிஷா கெமிஸ்ட்ரி மற்றும் சித்ராவின் குரலில் இந்தப் பாடல் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. ‘ திருமண நாள் எண்ணி நகர்ந்திடும் என் நாட்கள் சுகமான ஒரு சுமை தானே’ இந்தப் பாட்டை ரசிக்காத பெண்கள் இருக்க முடியாது.

தென்கிழக்கு சீமையிலே: கிழக்கு சீமையிலே படத்தில் ஏற்கனவே அண்ணன் தங்கை பாசப்பிணைப்பை காட்டி பாரதிராஜா அழ வைத்திருப்பார். அதற்கு மேலும் மெருகூட்டும் விதமாக சித்ராவின் குரலில் தென்கிழக்கு சீமையிலே பாடல் இன்னும் கரைய வைத்திடும்.’ தாய் வீட்டு சீரும், தாய்மாமன் சீரும் தெற்கத்தி பொண்ணுக்கொரு சொத்து சுகம் தான்’ என்ற பாட்டு வரிகளில் மெய்சிலிர்க்க வைத்திருப்பார் சித்ரா.

உன்னோடு வாழாத: அஜித் ஷாலினி காதலுக்கு அமர்க்களம் படத்தில் உயிர் கொடுத்திருக்கும் பாட்டு தான் உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு. ஷாலினியின் முகபாவனை, அதற்கு ஏற்ற மாதிரியான சித்ராவின் குரல் என பாட்டு பட்டையை கிளப்பி இருக்கும்.

எங்கே எனது கவிதை: கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் எங்கே எனது கவிதை பாடல் மூலம் இதயத்தை நொறுங்க வைத்திருப்பார் சித்ரா. இந்த பாடலை கேட்டு அழாத பெண்கள் இருக்க முடியாது. நீண்ட நாள் பிரிவில் இருக்கும் காதலை தான் காதலனே எங்கெல்லாம் தேடுவாள் என்பது போல் வரும் வரி அவ்வளவு அழகாக இருக்கும்.

கொஞ்சி பேசிட வேணாம்: விஜய் சேதுபதி மற்றும் ரம்யா நம்பீசன் கெமிஸ்ட்ரி எப்போதுமே பயங்கரமாக ஒர்க் அவுட் ஆகிவிடும். அதுவும் சேதுபதி படத்தில் கேட்கவே வேண்டாம். கணவன் மனைவி பிரிவில் இருக்கும் பொழுது, அந்த நெருக்கத்தை தேடும் பாடலாக கொஞ்சி பேசிட வேணாம் என்ற பாடல் இருக்கும். இதை சித்ராவின் குரலில் கேட்கும் போது இன்னுமே அதிகமான சந்தோஷத்தை கொடுக்கும்.

நான் போகிறேன் மேலே: சித்ரா, எஸ்பி பாலசுப்ரமணியத்துடன் இணைந்து பாடிய பாடல்களில் மறக்க முடியாத ஒன்று நான் போகிறேன் மேலே. இந்த பாட்டு மூலம் தான் நாணயம் என்று ஒரு படம் இருக்குது என்றே தமிழ் சினிமாவிற்கு தெரியும் என்றால் மிகையாகாது. இருவரது டூயட்டில் இந்த பாட்டு மெய்சிலிர்க்க வைத்திருக்கும்.

பாடகி சித்ரா கேரளாவை பூர்வீகமாக கொண்டவர். சினிமாவில் பாடுவதோடு கர்நாடக இசை மற்றும் ஹிந்துஸ்தானியிலும் தேர்ச்சி பெற்றவர். சித்ரா இது வரை ஒரு பாடலுக்கு மூன்று லட்சம் ரூபாய் சம்பளமாக பெறுகிறார். இவருடைய ஒட்டு மொத்த சொத்து மதிப்பு 15 கோடி ஆகும். சென்னையில் ஒரு பிரம்மாண்ட பங்களா இவருக்கு இருக்கிறது.

Trending News