திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

PM பேத்தி, CM மகளை ஹீரோயின் ஆக்கி அழகு பார்த்த மணிரத்தினம்.. கை கொடுத்த தூக்கி நிறுத்திய படம்

Manirathinam: தான் எடுக்கக்கூடிய படத்தின் மூலம் தமிழ் சினிமாவையே புரட்டிப் போட வேண்டும் என்பதற்கு ஏற்ற மாதிரி கெட்டிக்காரத்துடன் படத்தை எடுக்கக் கூடியவர் தான் இயக்குனர் மணிரத்தினம். அப்படிப்பட்ட இவர் பல நடிகர் நடிகைகளை கை கொடுத்து தூக்கி விட்டிருக்கிறார். இவர் படத்தில் நடித்து விட்டால் அடுத்தடுத்து படங்களில் வாய்ப்பு கிடைத்துவிடும் என்பது தான் நிதர்சனமான உண்மை.

அப்படி மணிரத்தினம் கைகொடுத்து தூக்கி விட்ட நடிகைகளில் ஒருவர் தான் மனிஷா கொய்ராலா. இவர் ஹிந்தியில் பல படங்களில் நடித்திருந்தாலும் தமிழுக்கு அறிமுகமான படம் பம்பாய். அறிமுகமான முதல் படத்திலேயே சிறந்த நடிகைக்கான விருதை பெற்றார். அந்த அளவிற்கு இப்படம் மிகப்பெரிய ஹிட் ஆகி மனிஷா கொய்ராலாக்கு அடுத்தடுத்து வாய்ப்பு தேடி வரும் வகையில் சுக்கிர திசை அடித்தது.

அதுவும் மணிரத்னத்துக்குப் பிறகு பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கருடன் இணைந்து கமல் நடிப்பில் இந்தியன் படத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். அதே மாதிரி அடுத்த படமும் முதல்வன் படத்தில் நடித்து வெற்றி நாயகி என்ற முத்திரையும் பதித்தார். அப்படிப்பட்ட இவரை தமிழில் அறிமுகப்படுத்திய பெருமை இயக்குனர் மணிரத்தினத்தையே சாரும்.

Also read: பான் இந்தியா படத்துக்காக மணிரத்தினம் செய்யத் துணிந்த விஷயம்.. சேர்ந்தே ஒத்து ஊதிய கமல்

மேலும் இவர் சினிமாவிற்குள் நுழைந்த பொழுது சாதாரண நடிகையாக மட்டும் இல்லை. இவருடைய குடும்பத்தில் உள்ளவர்கள் அரசியலில் இருந்தவர்கள். மனிஷா கொய்ராலா அப்பா பிரகாஷ் கொய்ராலா கேபினட் மினிஸ்டராக நேபாளில் இருந்திருக்கிறார். அதே மாதிரி இவருடைய தாத்தா பிஸ்வேஸ்வர் பிரசாத் கொய்ராலா பிரைம் மினிஸ்டர் ஆக நேபாளில் இருந்தவர்.

இப்படி அரசியல் பிரமுகர்களின் குடும்பத்தில் இருந்து வந்தவர் தான் மனிஷா கொய்ராலா. அப்படிப்பட்ட இவருக்கு சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் வந்தவருக்கு ஆதரவாக இருந்தவர் தான் மணிரத்தினம். அது மட்டுமில்லாமல் இவர் தமிழில் நடித்ததை விட பாலிவுட்டில் நடித்தது தான் அதிகம். அந்த அளவிற்கு இவருடைய மார்க்கெட் அங்கே உச்சாணிக்கொம்பில் இருந்தது.

இதற்கிடையில் இவர் நடித்த தமிழ் படங்கள் குறைவாக இருந்தாலும், அனைத்து படங்களும் சூப்பர் ஹிட் படங்களாக வெற்றி பெற்றது. அது மட்டும் இல்லாமல் இவருடைய அழகுக்கு ஈடு இணை யாரும் இல்லை என்பதற்கு ஏற்ப அந்த காலத்தில் ஆண்கள் அனைவரும் இவருடைய அழகுக்கு அடிமையாக இருந்தார்கள். இன்னும் சொல்லப் போனால் பெண்களின் அழகை ஏதாவது ஒப்பிட வேண்டும் என்றால், ஆமா அப்படியே மனசுல மனிஷா கொய்ராலா நெனப்பு என்று இவருடைய அழகை வைத்து ஒப்பிடுவார்கள். அந்த அளவிற்கு எல்லோருடைய மனதிலும் இடம் பிடித்தார்.

Also read: ஹாலிவுட் ரேஞ்சுக்கு பில்டப் பண்ணும் மணிரத்தினம்.. கமலின் தக் லைஃப் படத்தின் கதை இதுதான்

Trending News