வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

அப்படி ஒரு அண்ணனுக்கு இப்படி ஒரு தம்பியா.. செந்திலை காரித்துப்பிய போலீசார்

விஜய் டிவியின் ராஜா ராணி2 சீரியலில் அர்ச்சனா தன்னுடைய கணவர் செந்திலுடன் வீட்டில் இருப்பவர்களிடம் பொய் சொல்லிவிட்டு குற்றாலத்தில் குஷியாக லாட்ஜில் இரண்டு நாட்களில் ரூம்போட்டு தங்கியிருந்தார். ஆனால் அந்த லாட்ஜில் பெரும்பாலும் விபச்சார தொழில் நடப்பதால் ரைடுக்கு வந்த போலீஸ் அர்ச்சனா மற்றும் செந்தில் இருவரையும் கைது செய்து போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர்.

அதற்கேற்றார்போல் அர்ச்சனா அரைகுறை டிரஸ்ஸில் இருந்ததால், அர்ச்சனா மற்றும் செந்தில் இருவரும் கணவன்-மனைவி என்று சொன்னாலும் அதை நம்பத் தயாராக வில்லை. மேலும் போலீஸ் ஸ்டேஷனில் செந்தில், ‘நாங்கள் கவுரவமான குடும்பத்தை சேர்ந்தவர்கள்.

என்னுடைய அண்ணனும் நானும் தென்காசியில் ஜவுளி மற்றும் ஸ்வீட் கடை வைத்துள்ளோம்’ என்று கூறுகிறார். அதற்கு அங்கு இருந்த போலீஸ் ஒருவர், சமீபத்தில் சென்னைக்கு சென்று சமையல் போட்டியில் முதல் பரிசை பெற்று தந்த சரவணனின் தம்பியா நீ? இப்படி ஒரு அண்ணனுக்கு இப்படி ஒரு தம்பியா! என்று திட்டித் தீர்த்தார்.

அதன்பிறகு சரவணனின் போன் நம்பரை செந்தில் கொடுக்கிறார். பின்பு போலீசார் சரவணனுக்கு போன் செய்து போலீஸ் ஸ்டேஷனுக்கு வர சொல்கின்றனர். கடையில் இருந்த சரவணனும், சந்தியாவிடம் எதுவும் சொல்லாமல் அரக்கப்பரக்க போலீஸ் ஸ்டேஷனுக்கு வருகிறார்.

அதன்பிறகு சரவணனுக்காக போலீசார் செந்தில் மற்றும் அர்ச்சனாவை விடுதலை செய்கின்றனர். இதன்பிறகு சந்தியா, அர்ச்சனா தான் மாமியார் சிவகாமியை ஏற்கனவே ஜெயிலுக்கு அனுப்பியதற்கு காரணம் என்பதை தற்போது தெரிந்துகொண்டு அதனை வீட்டில் எப்படி சொல்வது என தடுமாறிக் கொண்டிருக்கும்.

அத்துடன் சரவணன் சமையல் போட்டியில் வெற்றி பெற்ற 5 லட்சம் பணத்தை ஆதி எடுத்திருப்பதை சந்தியா கண்டுபிடித்து அவரிடம் வாங்கப்போகும் விருவிருப்பான சம்பவமும் இனிவரும் எபிசோடில் ராஜா ராணி2 சீரியலில் காண உள்ளோம்.

Trending News