சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

கதிரை அடித்து துன்புறுத்தும் போலீஸ்.. பாண்டியனை வம்புக்கு இழுத்த மச்சான்கள், உண்மையை உளறிய ராஜி

Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், பெண்ணை கடத்தியதற்காக கதிரை போலீஸ் ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு வந்து விட்டார்கள். என் மகன் எந்த தவறும் பன்னிருக்க மாட்டான் என்று பாண்டியன், போலீஸிடம் வாதாடுகிறார். ஆனால் போலீஸ் என்ன சொன்னாலும் நம்பாமல் கதிர் குற்றவாளி போல் விசாரணை பண்ண ஆரம்பித்து விட்டார்கள்.

கதிரை போலீஸ் கூட்டி போய்விட்டார்கள் என்று நினைத்து வீட்டிற்குள் கோமதி அழுது புலம்புகிறார். பக்கத்தில் இருந்து மீனா மற்றும் தங்கமயில் ஆறுதல் படுத்துகிறார்கள். ஆனால் ராஜி, கதிர் எந்த தப்பும் பண்ணிருக்க மாட்டார் என்ற நம்பிக்கையில் தைரியமாக இருக்கிறார். அத்துடன் கோமதியையும் சமாதானப்படுத்தி ஆறுதலாக பேசுகிறார்.

அடுத்ததாக லாயர் மூலம் கதிரை வெளியே கொண்டு வரலாம் என்று பாண்டியன் மற்றும் செந்தில் வீட்டிற்கு வருகிறார்கள். அப்படி வந்ததும் சக்திவேல் மற்றும் குமரவேலு, பாண்டியனை வம்புக்கு இழுக்கும் விதமாக அவமானப்படுத்தி பேசுகிறார்கள். உடனே சண்டைக்குப் போன பாண்டியனிடம் முத்துவேலு உன் பையன் செய்யாத தப்புக்கா போலீஸ் கூட்டிட்டு போவாங்க.

பெண்ணை கடத்தி பிசினஸ் பண்றது எல்லாம் ஒரு பொழப்பாய் என்று கேவலமாக ராஜியின் அப்பா சித்தப்பா பேசுகிறார்கள். இதனால் இரண்டு குடும்பத்திற்கும் சண்டை வந்த நிலையில் ராஜி, கதிர் அந்த மாதிரி செய்யக்கூடிய ஆளு கிடையாது. தேவை இல்லாமல் என் புருஷன் மீது பழி போட்டு அவமானப்படுத்தாதீர்கள் என்று சொல்கிறார்.

உடனே சக்திவேலு அவனுக்கு பொண்ண கடத்துவது என்ன புது விஷயமா? ஏற்கனவே உன்னையும் இப்படிதான கடத்திட்டு போயி திருட்டு கல்யாணம் பண்ணி கூட்டிட்டு வந்தான் என்று வாய்க்கு வந்தபடி சொல்கிறார். இதனால் கோவப்பட்ட ராஜி, கதிர் ஒன்னும் என்னை கூட்டிட்டு போகவில்லை. நானா தான் போனேன், நான் போனதும் திருச்செந்தூரில் என்ன நடந்துச்சு, எப்படி எந்த சூழ்நிலையில் எங்களுக்கு கல்யாணம் ஆனது என்று தெரியுமா? என உண்மையை சொல்ல ஆரம்பித்து விடுகிறார்.

உடனே அங்கு இருப்பவர்கள் அனைவரும் அதிர்ச்சியாகி ராஜி ஏதோ சொல்ல போகிறார் என்று அமைதியாக நிற்கிறார்கள். ஆனால் ராஜி எதையும் சொல்லிட கூடாது என்று மீனா மற்றும் கோமதி தடுத்து விடுகிறார்கள். இதனை அடுத்து கதிரிடம் விசாரணை பண்ணும் போலீஸ் ஒரு குற்றவாளி போல கதிரை லாக்கப்பில் வைத்து கை ரெண்டையும் கட்டி லத்தியால் அடித்து காயப்படுத்தி துன்புறுத்தி விசாரிக்கிறார்கள்.

ஆனால் கதிர் நான் எந்த தவறும் செய்யவில்லை என்று சொல்லிய நிலையில் அங்கே நடந்த விஷயத்தையும் என் காரில் வந்த பெண்ணே நான் வீட்டிற்கு வந்து விட்டு விட்டேன் என்று சொல்கிறார். ஆனால் போலீஸ் கதிர் சொல்வதை நம்பாமல் தொடர்ந்து அடித்து சித்திரவதை செய்கிறார்கள். கதிரை பார்ப்பதற்கே பாவமாக இருக்கிறது என்பதற்கு ஏற்ப ரொம்பவே மோசமாக போலீஸ் அடித்து கொடுமைப்படுத்துகிறார்கள்.

ஆனால் அந்த பெண், அப்பாவிடம் மூன்று நாள் டூர் என்று சொல்லிய நிலையில் உடனே வீட்டுக்கு போனால் அப்பாவுக்கு சந்தேகம் வந்து விடும் என்பதற்காக தோழியின் வீட்டில் தங்கி இருக்கலாம். இது எதையும் விசாரிக்காமல் கதிர் மேல் வந்த பொய்யான வழக்கு மூலம் கதிர் சித்திரவதை அனுபவித்து வருகிறார். அந்தப் பெண் வந்து சொன்னால்தான் எல்லாத்துக்கும் உண்மை தெரிய வரும்.

Trending News