வெள்ளிக்கிழமை, ஜனவரி 3, 2025

பாக்கியலட்சுமி சீரியலுக்கு வந்த புது ஆப்பு.. பொசுக்குன்னு போலீஸ்ல போட்டுக் கொடுத்துட்டாங்க

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடர் குடும்ப ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பு பெற்று வருகிறது. இதற்கு முக்கிய காரணம் கதாநாயகி பாக்கியா தான். குடும்பத்தில் வரும் அனைத்து பிரச்சினைகளையும் குடும்பத்தலைவி ஆள் மட்டுமே சமாளிக்க முடியும் என்பதை இத்தொடர் காட்டுகிறது.

இந்நிலையில் பாக்கியலட்சுமி புதிய சிக்கல் ஒன்று வந்துள்ளது, கோபியின் தந்தை தனது நண்பரின் மகளை கோபிக்கு திருமணம் செய்து வைத்தார். ஆனால் கோபி தன்னுடைய கல்லூரியில் படித்த பெண்ணை காதலித்து வந்தார். தந்தை கட்டாயத்தால் அதிகம் படிக்காத பாக்கியாவை பிடிக்காமல் திருமணம் செய்து கொண்டார்.

தற்போது இவ்வளவு வயதான பிறகு கோபி தன்னுடைய கல்லூரி காதலி ராதிகாவுடன் பழகுவதை கோபியின் தந்தை அறிகிறார். இதனால் மிகுந்த மன கஷ்டத்தில் இருந்த கோபியின் தந்தைக்கு அதிர்ச்சியில் பக்கவாதம் ஏற்பட்டது. அவரை எப்படியாவது பழைய நிலைமைக்கு கொண்டு வர வேண்டும் என எல்லோரும் நினைக்கிறார்கள்.

இதனால் அவர்கள் குடும்பம் அவரை வீட்டிலேயே வைத்து சிகிச்சை பெற்று வருகின்றனர். கோபியின் தந்தை சிகிச்சைக்காக பிசியோதெரபிஸ்ட் என்ற ஒரு புதிய கதாபாத்திரத்தை பாக்கியலட்சுமி தொடர் அறிமுகம் செய்து வைத்தது. இத்தொடரில் ரஜினிகாந்த் என்ற கதாபாத்திரத்தில் பிசியோதெரபிஸ்ட் ஆக சின்னத்திரை நடிகர் ஷாம் நடித்தார்.

அவரது ரசிகர்களுக்கு பாக்கியலட்சுமி தொடரில் ஷாம் என்ட்ரி மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் பிசியோதெரபிஸ்ட் மீது கோபியின் மகள் இனியா அதிகமாக ஈர்க்கப்படுகிறாள். இதனால் ஜெனி மற்றும் பாக்யா இருவரும் இனியா மீது கொஞ்சம் கடுமையாக நடந்து கொள்கின்றனர்.

அதன்பிறகு எழில் இனியாவுக்கு பக்குவமாக புரிய வைக்க முயல்கிறார். இந்நிலையில் பிசியோதெரபிஸ்ட் மருத்துவம் மற்றும் நடவடிக்கையால் பிசியோதெரபிஸ்ட்களை தரைகுறைவாக சித்தரிப்பதாக கூறி இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் கதாசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி போலீஸில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

Trending News