வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

விஜயகாந்த் இறந்த செய்தி கேட்டு வடிவேலு என்ன செய்தார் தெரியுமா? வக்காலத்து வாங்கிய அரசியல்வாதி

Political person said that Actor Vadivel reaction for hearing vijayakanth death: பக்கத்திலே இருக்கும் போது நல்லவர்களின் அருமை நம்மவர்களுக்கு தெரிவதில்லை. அவர்களின் அருமை தெரியும்போது பக்கம் இல்லாத உணர்வினை சொல்ல முடிவதில்லை. விஜயகாந்த் உயிருடன் இருக்கும்போது வசைபாடிய வடிவேலு அவர் இறந்த பின் அழுது புலம்பி குற்ற உணர்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்.

எம்ஜிஆருக்கு பின் இந்த மண்ணில் இது போல் யாரும் இங்கே  இப்படி கொடுத்து வாழவில்லை என்ற உண்மையை விதைத்து சென்றவர் விஜயகாந்த். விஜயகாந்தின் மறைவு தமிழ் திரை உலகுக்கு மட்டுமல்லாமல் அவரது கட்சி தொண்டர்களுக்கும் தமிழ் மக்களுக்கும் மீளா துயரை உருவாக்கியது.

விஜயகாந்தின் இறுதிச்சடங்கிற்கு திரை பிரபலங்கள், அரசியல்வாதிகள் என பலரும் அஞ்சலி செலுத்த வந்த போதும் இன்று திரையில் முன்னணியில் இருக்கும் காமெடி மற்றும் குணச்சித்திர நடிகர் ஆன வடிவேல் அவர்கள் அஞ்சலி செலுத்த வராதது பல சர்ச்சைகளை கிளப்பியது.

Also Read: விஜயகாந்த் வளர்த்து விட்ட 6 நடிகர்கள்..குடை பிடிக்க வந்து கொடூரமாக தாக்கிய மாமன்னன்!

நெட்டிசன்கள் மற்றும் விஜயகாந்தின் ரசிகர்கள் பலரும் வடிவேலுவை அவதூறாக பேசி வந்தனர். இதற்கென எந்த ஒரு பதிலும் தராமல் பொறுமை காத்து வந்தார் வடிவேலு. இதனைக் கண்டு வெகுண்டு எழுந்த வடிவேலுவின் நண்பரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகி மாலின் அவர்கள் இந்த அவதூறுகளுக்கு பதில் உரைத்து உள்ளார்.

விஜயகாந்த் இறந்த நிகழ்வை கேட்டு வடிவேல் அழுதுவிட்டாராம். யாரையும்  பார்க்காமல் பேச விரும்பாமல் நாள் முழுவதும் சாப்பிடாமல் இருந்தாராம். இறுதிச் சடங்கிற்கு வந்தால் விஜயகாந்தின் ஆதரவாளர்களால் பிரச்சனையாக கூடும் என்ற கருத்திலேயே வராமல் இருந்து விட்டாராம் என்று மாலின் தெரிவித்தார்.

வடிவேலு முன்பு போல் இல்லாமல் தனது தாய் மற்றும் சகோதரனின் இறப்பிற்குப் பிறகு ரொம்ப உடைந்து போயிட்டாராம். பத்து வருஷம் நடிக்காமல் இருந்தபோது யாரும் கண்டுக்காததால் மனம் வருந்தி உள்ளார். காலம் கடந்த வருத்தத்தை தெரிவித்து என்ன பயன்.

Also Read: அவன் ஊரை காப்பாத்த அவன் தானங்க போவான்.. இயக்குனரை தாங்கி பிடித்த வடிவேலு

Trending News