புதன்கிழமை, அக்டோபர் 16, 2024

நீட் தேர்வு பத்தி தெரிஞ்சுக்கிட்டு பேசுங்க விஜய்.. கார்ப்பரேட் மருத்துவத்தை தோலுரித்த அரசியல் பிரபலம்

Vijay: சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற மாணவர்களுக்கான விழாவில் விஜய் நீட் தேர்வு குறித்து பேசி இருந்தார். அதில் அவர் ஒன்றிய அரசை பற்றியும் நீட் தேர்வு ரத்து பற்றியும் கூறிய கருத்துக்களுக்கு வரவேற்பு கிடைத்து வருகிறது.

அதே சமயம் இது தற்போது ஒரு விவாதமாகவும் மாறி உள்ளது. உண்மையில் நீட் தேர்வு நன்மையா தீமையா என்ற அளவுக்கு சமூக வலைத்தளங்களில் அனைவரும் இதைப்பற்றி பேச தொடங்கி விட்டனர்.

அந்த வகையில் நேதாஜி மக்கள் கட்சியின் தலைவர் திரு வரதராஜ் அவர்கள் விஜய்க்கு ஒரு விஷயத்தை தெளிவுபடுத்தி இருக்கிறார். அதாவது நீட் தேர்வை பற்றி தெரியாமல் எதையும் பேசக்கூடாது.

இது கிராமப்புற மாணவர்களுக்கு எதிரானது கிடையாது. உண்மையில் மருத்துவம் என்பது மிகப்பெரிய படிப்பு மட்டுமல்லாமல் பொறுப்பும் கூட. அதற்கு கல்வி அறிவு நிச்சயம் தேவை. அது இருந்தும் கூட சிலரால் மருத்துவ படிப்பை படிக்க முடியவில்லை.

ஏனென்றால் சில கவர்மெண்ட் கோட்டாக்கள் மூலம் நடிகர்கள், அரசியல் பிரபலங்கள் ஆகியோரின் பிள்ளைகள் சுலபமாக சீட்டை வாங்கி விடுகின்றனர். அதற்காகத்தான் இந்த நீட் தேர்வு கொண்டுவரப்பட்டது.

அரசியல்வாதிகளுக்கு கொட்டிக் கொடுக்கும் கார்ப்பரேட்

இதன் மூலம் பணம் இல்லை என்றாலும் ஏழை மாணவர்கள் டாக்டராக முடியும். அதே சமயம் பணம் இருந்தால் கூட பணக்கார பிள்ளைகளால் டாக்டர் சீட்டை விலைக்கு வாங்கி விட முடியாது. மேலும் தற்போது அரசியல் கட்சியினர் நீட் விலக்கு மசோதாவை கொண்டு வருகின்றனர்.

எதற்காக என்றால் தனியார் மருத்துவ கல்வி நிறுவனங்கள் இவர்களுக்கு கோடி கோடியாக பணத்தை கொட்டிக் கொடுக்கின்றனர். நீட் ரத்து வந்தால் தான் அவர்களால் மருத்துவ சீட்டை விற்று லாபம் பார்க்க முடியும்.

அதனாலையே அரசியல் கட்சியினர் நீட் தேர்வுக்கு எதிராக பேசுகின்றனர் என வரதராஜ் தெரிவித்துள்ளார். உண்மையில் இதுதான் தற்போதைய நிலைமை. ஆனால் விஜய் கூறியது என்னவென்றால் மாநில வழி கல்வியை படித்த மாணவர்கள் NCERT பாடத்திட்ட கேள்விகளுக்கு பதில் அளிப்பது சிரமம் என குறிப்பிட்டு இருந்தார்.

அதேபோல் கல்வியை தேசிய பட்டியலில் இருந்து மாநில பட்டியலுக்கு கொண்டுவர வேண்டும். இதன் மூலம் மாணவர்களுக்கு பல நன்மைகள் கிடைக்கும். அதனாலயே நீட் ரத்து பற்றி அவர் பேசி இருந்தார்.

இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயமும் இருக்கிறது. நீட் தேர்வு பற்றி மாணவர்களுக்கான சிறந்த வழிகாட்டுதல் இருக்க வேண்டும். அதேபோல் பயிற்சி மையங்களும் அரசாங்கத்தால் நடத்தப்பட வேண்டும்.

ஏனென்றால் தற்போது இதற்கான பயிற்சி மையங்களை தனியார் நிறுவனங்கள் அதிக அளவில் தொடங்கி வருகின்றனர். அதன் மூலம் ஏகப்பட்ட காசும் பார்க்கின்றனர். அதை தவிர்ப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் பலரின் கருத்தாக இருக்கிறது. ஆக மொத்தம் நீட் தேர்வினால் நன்மையும் இருக்கிறது தீமையும் இருக்கிறது.

நீட் தேர்வு நன்மையா தீமையா.?

- Advertisement -spot_img

Trending News