வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

5 பெண்களை காதல் வலையில் வீழ்த்தி ஏமாற்றிய சீமான்.. பகீர் கிளப்பி இருக்கும் விஜயலட்சுமியின் பேட்டி

Seeman-Vijayalakshmi: ஒட்டு மொத்த தமிழகத்தையும் கடந்த சில தினங்களாக அமளி துமளி கிளப்பிக் கொண்டிருக்கும் செய்தி என்றால் அது விஜயலட்சுமி, சீமான் பிரச்சனை தான். கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாகவே இப்படி ஒரு விஷயம் நடந்து கொண்டிருப்பது மக்களுக்கு தெரியும் என்றாலும், நடிகை விஜயலட்சுமி அவ்வப்போது இந்த செய்தியை பெரிதாக்கி பரபரப்பு கூட்டி கொண்டிருக்கிறார்.

இதைப் பற்றி சமீபத்திய பேட்டி ஒன்றில் மூத்த பத்திரிக்கையாளர் பாண்டியன் ஒரு சில விஷயங்களை பகிர்ந்திருக்கிறார். அந்த பேட்டியில் அவர், விஜயலட்சுமி கடந்த பத்து வருடங்களாக சீமானுடன் திருமணம் செய்யாமல் வாழ்ந்து வந்ததாக சொல்கிறார், இது உண்மையிலேயே நம்முடைய மரபுக்கு மாறுபட்ட விஷயம் என்பதால் இதில் முதல் குற்றவாளியே விஜயலட்சுமி தான், மேலும் அவர் தன்னுடைய அன்றாட தேவைகளுக்கான பண செலவுக்காகத்தான் இந்த பிரச்சனையை மீண்டும் மீண்டும் பேசுகிறார்.

Also Read:ஈகோ காரணமாக சண்டை போட்ட 5 நட்சத்திரங்கள்.. சீமான் விஜயலட்சுமிக்கு முன்னாடி ஜோ போட்ட சண்டை

சீமானை பொறுத்த வரைக்கும் விஜயலட்சுமி மட்டும் இல்லை அவர் காதலித்து ஐந்து பெண்களை ஏமாற்றி இருப்பதாக பாண்டியன் சொல்லி இருக்கிறார். மேலும் திருமணம் செய்தால் ஈழத்தை சேர்ந்த விதவைப் பெண்ணை தான் திருமணம் செய்து கொள்வேன் என்று பகிரங்கமாக அறிக்கை விட்டிருந்தார். அந்த சமயத்தில் இலங்கை பெண் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொள்ளாமல் விட்டுவிட்டார்.

இலங்கை ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்ட ஈழப் பெண் தான் இசைவாணி. இந்த இசை வாணியையும், சீமான் காதலித்ததாக பாண்டியன் சொல்லி இருக்கிறார். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி இலங்கை மக்களுக்காக போராட்டம் செய்த பொழுது கூட, சீமான் ஒரு பெண்ணை அந்த போராட்டத்திற்கு அழைத்து வந்ததாகவும், அந்த பெண்ணும் சீமானின் காதலி தான் என சொல்லி இருக்கிறார்.

Also Read:விஜயலட்சுமி டேட்டிங் உறவில் இருந்த 4 பிரபலங்கள்.. அப்ராணிக்கு அப்ராணியா இருந்த பிரெண்ட்ஸ் அமுதா

இந்த வரிசையில் சேர்ந்தவர்தான் நடிகை விஜயலட்சுமி கூட. அவர் தன்னை ஒரு இலங்கைப் பெண் என்று சொல்லிக் கொள்வதே மிகப்பெரிய பொய் என்றும், அவர் தமிழகத்தைச் சேர்ந்தவர் தான் என்று சொல்லி இருக்கிறார். அவர் இப்படி பிரச்சனையை அடிக்கடி செய்வது பணத்திற்காகத்தான் என்று சொல்லி இருக்கிறார்.

சீமான் தற்போது திருமணம் செய்திருப்பது கயல்விழி என்பவரை தான். இவரையும் காதலித்து, கழட்டி விடத்தான் அவர் திட்டம் போட்டிருந்ததாகவும், கயல்விழி தரப்பில் இருந்து வன்முறை அளவுக்கு சென்ற ஒரே காரணத்தால் தான் திருமணம் செய்து கொண்டதாகவும், பாண்டியன் அந்த பேட்டியில் சொல்லி இருக்கிறார்.

Also Read:கள்ள காதலனை பார்த்துட்டு வரியா ஈஸ்வரி.? செல்லா காசாக குணசேகரனை கிழித்து தொங்க விட்ட சம்பவம்

Trending News