தமிழக அரசியலில் நடிகர் விஜய்யின் வருகைக்குப் பிறகு,சினிமா மற்றும் அரசியல் தொடர்பான விவாதங்கள் தொடர்ந்து கவனம் பெற்று வருகின்றன.குறிப்பாக,திரையுலகைச் சேர்ந்த மற்ற நடிகர்கள் விஜய்யின் அரசியல் பயணம் குறித்து என்ன கருத்து தெரிவிக்கிறார்கள் என்பதையும் ரசிகர்கள் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர்.
இந்நிலையில், நடிகர் விஜய் சேதுபதி பேசியதாக ஒரு கருத்து சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.அதில்,விஜய்யை ஒரு நடிகராக மட்டுமே தனக்குத் தெரியும் என்றும்,அவருடைய அரசியல் திட்டங்கள் அவருடைய தனிப்பட்ட முடிவு என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும், எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் மக்கள் அரசியல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும்,தனது முழுக் கவனமும் சினிமா மற்றும் நடிப்புப் பணிகளில் மட்டுமே இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக,தொடர்ந்து அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தவெக அரசையும் முதல்வர் விஜய்யையும் மறைமுகமாகச் சாடி வந்தார். இதற்கு தவெகவினர் கடுமையாக அவரைச் சமூக வலைதளங்களில் விமர்சித்தனர்.
மேலும்,அவர் 2019ஆம் ஆண்டு மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, அறிவும் மக்களுக்குச் சேவை செய்யும் மனப்பக்குவமும் உள்ளவர்கள் அரசியலுக்கு வரலாம் என்று விஜய் சேதுபதி தெரிவித்திருந்தார்.2021ஆம் ஆண்டிலும் தனது அரசியல் பார்வைகள் குறித்து நேர்காணலில் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.




