தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் யார்.? வெளியான கருத்துக்கணிப்பு, விஜய்க்கு எந்த இடம்.?

Vijay: நேற்று தமிழக வெற்றி கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட தலைவர் விஜய் மைக்கை பிடித்து அனல் பறக்க ஆவேசமாக பேசினார்.

ஏற்கனவே அவர் தன்னுடைய அரசியல் எதிரி ஆளும் கட்சி தான் என்பதை தெளிவாக சொல்லிவிட்டார். ஆனாலும் சோசியல் மீடியாவில் பெயரை சொல்ல பயமா என்று கிண்டலடித்தனர்.

அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இருந்தது அவருடைய பேச்சு. அதே போல் மத்திய மாநில ஆளும் கட்சியை கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார்.

விஜய்க்கு எந்த இடம்.?

அது மட்டும் இன்றி அடுத்த வருடம் வர இருக்கும் தேர்தலில் போட்டியே திமுக-வுக்கும் தாவெக-வுக்கும் தான் என உறுதியாக கூறினார். ஆனால் அரசியல் கட்சியினர் இதை கிண்டல் அடித்தனர்.

விஜய்க்கு அந்த அளவுக்கு ஆதரவு இருக்காது என்று கூட பேசப்பட்டது. ஆனால் அவர் சொன்னதை உறுதிப்படுத்துவது போல் ஒரு கருத்துக்கணிப்பு வெளியாகி இருக்கிறது.

சி வோட்டார் தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் யார் என்ற கருத்துக்கணிப்பை நடத்தியுள்ளது. அதில் தற்போதைய முதல்வர் ஸ்டாலின் 27% ஆதரவுடன் முதலிடத்தை பிடித்துள்ளார்.

இரண்டாவது இடத்தை விஜய் 18% ஆதரவுடன் பிடித்துள்ளார். 10% ஆதரவு எடப்பாடி பழனிச்சாமிக்கும் 9 % ஆதரவு அண்ணாமலைக்கும் கிடைத்துள்ளது.

ஆக விஜய் சொன்னது போல் அடுத்த தேர்தலில் DMK, TVK இரு கட்சிகளுக்கு இடையே தான் பயங்கர போட்டியிருக்கும் என தெரிகிறது. அதில் மக்களின் ஆதரவுடன் யார் முதலமைச்சர் அரியணையில் அமர்வார் என பார்ப்போம்.

Leave a Comment