வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

பொன்னின் செல்வன் காட்டிய தீராத ஆசை.. 12 வருடம் கழித்து ரீ-என்ட்ரி கொடுக்கும் ஐஸ்வர்யா ராய்

ஏராளமான ஹிந்தி திரைப்படங்களில் நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராய் முதன்முதலாக தமிழ் திரைப்படத்தின் மூலம் தான் திரையுலகுக்கு அறிமுகமானார். அதை தொடர்ந்து ஹிந்தி பக்கம் தன் கவனத்தை செலுத்திய அவர் அவ்வப்போது தமிழ் திரைப்படங்களிலும் நடித்து வந்தார்.

அந்த வகையில் இவர் கடைசியாக சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஜோடியாக 2010ல் எந்திரன் திரைப்படத்தில் நடித்தார். அதன் பிறகு ஹிந்தி திரைப்படங்களில் மட்டுமே நடித்து வந்த இவர் பொன்னியின் செல்வன் மூலம் மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். கிட்டத்தட்ட 12 வருடங்களுக்கு பிறகு அவர் தமிழில் நடிப்பதால் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் இந்த படத்தை எதிர்பார்க்கின்றனர்.

Also read:பொன்னியின் செல்வன் கதையில் அரளவிட்ட 5 பெண் கேரக்டர்கள்.. இரு வேடங்களில் கலக்கிய ஐஸ்வர்யா ராய்

இந்த திரைப்படத்தில் அவர் மிகவும் பவர்ஃபுல்லான கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளார். அதாவது நந்தினி மற்றும் மந்தாகினி என்ற இரு வேடங்களில் அவர் நடித்திருக்கிறார். அந்த கதாபாத்திரம் எந்த அளவிற்கு இருக்கும் என்று பொன்னியின் செல்வன் கதையை படித்த ரசிகர்களுக்கு நன்றாகவே தெரியும்.

இப்படி ஒரு வலுவான கதாபாத்திரம் மூலம் மீண்டும் தமிழ் திரை உலகிற்கு திரும்பி வந்திருக்கும் ஐஸ்வர்யா ராய்க்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அது மட்டுமல்லாமல் அவருடைய மேஜிக்கை திரையில் காண்பதற்கும் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Also read:முன்பதிவில் பல கோடி லாபம் பார்த்த பொன்னியின் செல்வன்.. மிரள விட்ட மணிரத்னம்

இப்படி தமிழ் திரை உலகில் ஐஸ்வர்யா ராய்க்கு சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டு வருவதால் அவர் இனிமேல் அடுத்தடுத்து தமிழில் பல திரைப்படங்கள் நடிக்க வேண்டும் என்ற முடிவில் இருக்கிறாராம். அவருக்கு எப்பொழுதும் தமிழ் திரை உலகின் மீது ஒரு தனி மதிப்பும், மரியாதையும் இருக்கிறது.

அதிலும் தற்போது பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் அவருடைய கதாபாத்திரம் கொண்டாடப்பட்டு வருவது அவரை மிகுந்த சந்தோஷத்தில் ஆழ்த்தி உள்ளது. அதனால் இனிமேல் ஐஸ்வர்யா ராயை நாம் அடுத்தடுத்து தமிழ் திரைப்படங்களில் காணலாம்.

Also read:உயிரைக் கொடுத்து எடுத்த மணிரத்னம், சோலியை முடித்த சுஹாசினி.. கழுவி ஊற்றும் ப்ளூ சட்டை மாறன்

Trending News