ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

நைட் பார்ட்டியில் கும்மாளம் போட்ட பொன்னியின் செல்வன் நடிகை.. அம்பலப்படுத்திய பயில்வான்

பல ஜாம்பவான்களின் கனவாக இருந்த பொன்னியின் செல்வன் நாவல் தற்போது மணிரத்தினம் கைவண்ணத்தில் திரைப்படமாக மாறி இருக்கிறது. ஏகப்பட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கும் இந்த படத்தின் முதல் பாகம் கடந்த வருடம் வெளியாகி வெற்றி நடை போட்டது.

அதைத்தொடர்ந்து தற்போது அடுத்த பாகமும் வெளிவர இருக்கிறது. இன்னும் சில தினங்களில் ரிலீஸாக இருக்கும் இந்த படத்திற்காக பட குழுவினர் அனைவரும் மும்முரமாக ப்ரமோஷன் செய்து வருகின்றனர். மேலும் அது தொடர்பான போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் அனைத்தும் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Also read: பொன்னியின் செல்வனில் வந்தியத்தேவன் கார்த்திக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா!. குந்தவையை விட கம்மியா இருக்குதே

இந்நிலையில் இதில் நந்தினி என்னும் அட்டகாசமான கேரக்டரில் நடித்துள்ள ஐஸ்வர்யா ராய் சமீபத்தில் நைட் பார்ட்டியில் குடித்துவிட்டு கும்மாளம் போட்டது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. உலக அழகியாக ஏராளமான ரசிகர்களை கொண்டுள்ள இவர் தமிழ் சினிமாவிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

அந்த வகையில் பொன்னியின் செல்வனில் இவருடைய தோற்றமும், நடிப்பும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்நிலையில் இவர் நைட் பார்ட்டியில் குடித்துவிட்டு ஆட்டம் போட்டிருப்பது பலரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது. சில தினங்களுக்கு முன்பு வெளியான இந்த வீடியோ சோசியல் மீடியாவையே ரணகளப்படுத்தியது.

Also read: கணவரை மட்டம் தட்டி பேசிய சுஹாசினி.. நேர்காணலில் முகம் சுளிக்க வைத்த பேச்சு

அதைத்தொடர்ந்து பெரிய குடும்பத்தின் மருமகள் இப்படியெல்லாம் பொது இடத்தில் அநாகரிகமாக நடந்து கொள்ளலாமா என பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். அது மட்டுமல்லாமல் இவ்வளவு பெரிய மகள் இருக்கும் போது கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும் எனவும் ஐஸ்வர்யா ராய்க்கு எதிராக கருத்துகள் கிளம்பியது.

அதையே தற்போது பயில்வான் விமர்சித்து உலக அழகியின் குடும்ப மானத்தை அம்பலப்படுத்தி இருக்கிறார். அதாவது இப்படி குடித்துவிட்டு ஆட வேண்டும் என்றால் பப், கிளப் போன்ற பல இடங்கள் இருக்கிறது. அதை விட்டுவிட்டு பல முன்னணி நட்சத்திரங்களும் இருக்கும் இடத்தில் இப்படியா ஆட்டம் போடுவது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். ஆனாலும் இதெல்லாம் அவருக்கு ரொம்ப சாதாரணம் என்ற ரீதியில் கலாய்த்தும் இருக்கிறார்.

Also read: குந்தவைக்கு ஏன் கல்யாணம் நடக்கல? உண்மையை புட்டு புட்டு வைக்கும் திரிஷாவின் அம்மா

Trending News