வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

வசூல் வேட்டையில் பொன்னியின் செல்வன்.. முதல் நாள் கலெக்ஷன் எவ்வளவு தெரியுமா?

ஒட்டு மொத்த திரையுலகமும் ஆவலுடன் எதிர்பார்த்த பொன்னியின் செல்வன் திரைப்படம் இன்று வெளியாகி இருக்கிறது. மணிரத்னம் இயக்கியிருக்கும் இந்த திரைப்படத்தை அவருடன் இணைந்து லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது.

கிட்டத்தட்ட 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் தற்போது வசூல் வேட்டையில் பல சாதனைகள் புரிந்து வருகிறது. ஏற்கனவே டிக்கெட் முன்பதிவு வரலாறு காணாத அளவுக்கு லாபம் பார்த்த நிலையில் தற்போது முதல் நாள் வசூலும் எதிர்பார்ப்பதற்கும் மேலாக இருக்கிறது.

Also read : எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தாரா மணிரத்னம்.? பொன்னியின் செல்வன் முழு விமர்சனம்

அந்த வகையில் தற்போது பொன்னியின் செல்வன் 50 கோடி ரூபாயை தாண்டி வசூல் செய்திருக்கிறது. அதில் வெளிநாட்டில் மட்டுமே 20 கோடிக்கும் மேல் வசூலாகி இருக்கிறதாம். தற்போது இப்படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்களும் வந்து கொண்டிருப்பதால் முதல் நாள் வசூலே 60 கோடியை தாண்டி விடும் என்று கணிக்கப்படுகிறது.

அது மட்டுமல்லாமல் வார இறுதி நாட்களில் இந்த வசூல் இன்னும் அதிகரிக்கும் என்பதில் எந்த விதமான சந்தேகமும் இல்லை. அதை வைத்து பார்க்கும் பொழுது இப்படம் இரண்டாவது நாள் வசூலிலேயே 100 கோடியை தாண்டி வசூலிக்கும் நிலையில் இருக்கிறது.

Also read : பிரம்மாண்டத்தை மிஞ்சிய பொன்னியின் செல்வன்.. தீயாக பரவும் ட்விட்டர் விமர்சனம்

வரும் ஞாயிற்றுக்கிழமையை தொடர்ந்து அடுத்தடுத்து ஆயுத பூஜை உள்ளிட்ட விடுமுறை நாட்களும் வருவதால் பொன்னியின் செல்வன் முதல் வாரத்திலேயே 300 கோடியை தாண்டி விடும் என்று திரை உலகில் பேசப்பட்டு வருகிறது. ஏற்கனவே இந்த படத்தின் சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமைகள் பல கோடிக்கு விற்பனையாகி இருக்கிறது.

அதுவே நல்ல லாபத்தை கொடுத்த நிலையில் தற்போது படத்தின் வசூலும் ஏறுமுகமாகவே இருப்பது படக்குழுவினரை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. இதற்கு முன் தமிழ் சினிமாவில் வசூல் சாதனை நிகழ்த்திய அத்தனை திரைப்படங்களின் சாதனையையும் இந்த பொன்னியின் செல்வன் தற்போது முறியடித்துள்ளது. இந்த சாதனை இனிவரும் நாட்களில் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also read : டேய் நீ பாண்டிய நாடா? இல்ல சோழ நாடா? அனல் பறக்கும் பொன்னியின் செல்வன் மீம்ஸ்கள்

Trending News