வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

ரிலீசுக்கு முன்பே கல்லா கட்டிய பொன்னியின் செல்வன்.. RRR, KGF-ஐ ஓரங்கட்டிய மணிரத்னம்

மணிரத்தினத்தின் கனவு திரைப்படமான பொன்னியின் செல்வன் என்ற வரலாற்று காவியம் தற்போது பிரம்மாண்டமாக தயாராகியுள்ளது. வரும் 30ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்த படத்தைக் காண ரசிகர்கள் பலரும் வெறியுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

அந்த வகையில் வரும் 6ம் தேதி இந்த படத்தின் பாடல் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா கோலாகலமாக நடைபெற உள்ளது. இதற்கான பிரமோஷனை தற்போது லைக்கா நிறுவனம் சோசியல் மீடியாவில் தொடங்கியுள்ளது. விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, சரத்குமார், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.

Also read : வைரமுத்துவை ஒதுக்கி வைத்த மணிரத்தினம்.. சுஹாசினி ஏற்படுத்திய சூழ்ச்சி

பொன்னியின் செல்வன் நாவலில் நாம் படித்து ரசித்த அந்த கதாபாத்திரங்கள் திரையில் எப்படி இருக்கும் என்பதை காணும் ஆவல் அனைவருக்கும் இருக்கிறது. அந்த வகையில் ஒவ்வொரு கேரக்டரின் பெயரையும் தற்போது தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட வண்ணம் உள்ளது.

இப்படி எங்கு திரும்பினாலும் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் இப்படம் மற்றுமொரு ஆச்சரியத்தை கொடுத்துள்ளது. அதாவது இப்படத்தின் ஓ டி டி உரிமையை கைப்பற்றுவதற்கு பல நிறுவனங்களும் போட்டி போட்டு வந்தது. அந்த போட்டியில் அமேசான் நிறுவனம் பல கோடிகளை கொடுத்து அந்த உரிமையை கைப்பற்றி இருக்கிறது.

Also read : மணிரத்தினத்தின் கழுத்தை நெறிக்கும் பொன்னியின் செல்வன் ரிலீஸ்.. சுயநல வாதியாக மாறிய நடிகர்கள்

அதன் அடிப்படையில் அமேசான் நிறுவனம் 120 கோடி கொடுத்து பொன்னியின் செல்வன் உரிமையை வாங்கி இருக்கிறது. இது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் எந்த ஒரு தமிழ் படமும் இதுவரை இவ்வளவு கோடிக்கு விற்பனையாகவில்லை.

அந்த வகையில் மணிரத்னம் கே ஜி எஃப் போன்ற பெரிய பட்ஜெட் திரைப்படங்களை எல்லாம் ஓரம் கட்டி விட்டார். ரிலீசுக்கு முன்பே இப்படி ஒரு சாதனையை ஏற்படுத்திய பொன்னியின் செல்வன் படம் வெளியான பிறகு நிச்சயம் பாக்ஸ் ஆபிஸை கலக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாகுபலி, கே ஜி எஃப் போன்ற படங்களுக்கு எல்லாம் சவால் விடும் வகையில் இதன் கலெக்ஷன் இருக்கும் என்றும் பேசப்பட்டு வருகிறது.

Also read : பொன்னியின் செல்வனுடன் மோத தயாரான தனுஷ்.. தந்திரமாக முடிவெடுத்த செல்வராகவன்

Trending News