வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

இணையத்தை கலக்கும் வானதி-பூங்குழலி.. படு கிளாமராக பொன்னியின் செல்வன் ஹீரோயின்ஸ்

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகம் சமீபத்தில் ரிலீஸ் ஆகி வெற்றி நடை போட்டு வருகிறது. இந்த படத்திற்கு பயங்கரமான பாசிட்டிவ் விமர்சனங்கள் மட்டுமே கிடைத்து வருகிறது. இதன் படம் ரிலீஸ் ஆகி இரண்டு நாட்களிலேயே 100 கோடி வசூலை தொட்டுவிட்டதாக படக்குழு தற்போது தெரிவித்திருக்கிறது.

பொன்னியின் செல்வன் கதை நாவலில் ஒரு சில கேரக்டர்கள் கல்கியால் உருவாக்கப்பட்டது தான். கதையைப் படித்த வாசகர்கள் பலரும் இந்த படத்தில் எதிர்பார்த்தது ஆதித்ய கரிகாலனின் மரணத்திற்கான காரணம் யார் என்பதை இந்த படத்தில் சொல்வார்களா என்பதை தான். ஆனால் ரசிகர்கள் கொஞ்சமும் எதிர்பார்க்காத ஒரு காரணத்தையும், கொலை செய்த நபரையும் சொல்லி அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறார் இயக்குனர்.

Also Read:காலி பெருங்காய டப்பாவான மணிரத்னம்.. பொன்னியின் செல்வன் 2வை பங்கமாக கலாய்த்த ப்ளூ சட்டை மாறன்

இந்தப் படத்தில் அருள் மொழி வர்மன் ஆக ஜெயம் ரவி, வந்திய தேவனாக கார்த்தி, ஆதித்ய கரிகாலனாக சீயான் விக்ரம், குந்தவையாக த்ரிஷா, நந்தினி ஐஸ்வர்யா ராய் நடித்திருக்கிறார்கள். மேலும் பிரகாஷ்ராஜ், பிரபு, ஜெயராம், சரத்குமார், பார்த்திபன், ரகுமான், ஐஸ்வர்யா லட்சுமி, சோபித்தா தூலிபாலா போன்றோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். படத்தின் பிரமோஷன் வேலைகளுக்காக மொத்த பட குழுவும் இந்தியாவின் முக்கிய நகரங்களை விசிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தில் சோபித்தா தூலிபாலா வானதி என்னும் கேரக்டரில் நடித்திருந்தார். சோழ அரசன் அருண்மொழிவர்மனை காதலித்து அவரையே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தோடு வாழ்ந்த கொடும்பலூரில் இளவரசி கேரக்டர் தான் இவருக்கு. சோபிதா நடிகை மட்டுமல்லாமல் ஒரு மாடலிங் அழகியும் ஆவார். இவர் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் ரிலீஸுக்கு பிறகு மலரும் நினைவாக படப்பிடிப்பின் போது எடுத்துக்கொண்ட வீடியோ மற்றும் புகைப்படத்தை தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

                                                   பொன்னியின் செல்வன் நடிகை சோபித்தா தூலிபாலா

PS movie Shobitha

Also Read:மணிரத்னத்தின் மாஸ்டர் பீஸ் பொன்னியின் செல்வன்.. பாகுபலி விட ஆயிரம் மடங்கு ஸ்பெஷல் ஏன் தெரியுமா?

இந்த வீடியோவில் அவருடன் பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலி கதாபாத்திரத்தில் நடித்த ஐஸ்வர்யா லட்சுமி உடன் இருந்தார். அந்த காலத்து பெண்களைப் போல இவர்கள் இருவரும் இந்த வீடியோவில் ஆடை அணிந்திருந்தாலும், ரொம்பவும் கிளாமராகவே இருந்தது. தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. நெட்டிசன்கள் பலரும் இந்த வீடியோவுக்கு கமெண்ட் செய்து வருகின்றனர்.

                                    பொன்னியின் செல்வன் நடிகைகள் சோபித்தா தூலிபாலா, ஐஸ்வர்யா லட்சுமி

சோபித்தா தூலிபாலா, ஐஸ்வர்யா லட்சுமி

பூங்குழலி கதாபாத்திரத்தில் நடித்த ஐஸ்வர்யா லட்சுமி ஆக்சன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர். அதன் பின்னர் தனுஷின் ஜகமே தந்திரம் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாகவும், கட்டா குஸ்தி என்னும் திரைப்படத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக, வித்தியாசமான ஒரு கேரக்டரில் நடித்திருந்தார். பல நடிகைகளும் மணிரத்னம் இயக்கத்தில் நடித்து விட வேண்டும் என்ற ஏக்கத்தில் இருக்கும் பொழுது தமிழ் சினிமாவிற்கு வந்த சில நாட்களிலேயே இவருக்கு பொன்னியின் செல்வனில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

Also Read:வம்சத்தை கருவறுக்க காத்திருந்த நந்தினி.. நேருக்கு நேர் சந்தித்த ஆதித்த கரிகாலன், மிரட்டிவிட்ட பொன்னியின் செல்வன் 2

Trending News