கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக்கிய இயக்குனர் மணிரத்னம், அதன் முதல் பாகத்தை தமிழ், இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் கடந்த 30 ஆம் தேதி வெளியிட்டார். வரலாற்றை தெரிந்துகொள்ள இவ்வளவு ஆர்வமா என திரையுலகை வியந்து பார்க்கும் அளவுக்கு ரசிகர்கள் பொன்னியின் செல்வன் படத்திற்கு ஏகபோக வரவேற்பு கொடுத்துக் கொண்டிருக்கின்றனர்.
இரண்டு பாகங்களை எடுப்பதற்கு இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்கா புரொடக்ஷன்ஸ், வெறும் 250 கோடி மட்டுமே செலவிட்ட நிலையில், முதல் பாகம் ரிலீஸான முதல் வாரத்தில் மட்டும் உலக முழுவதும் ரூபாய் 325 கோடியை வசூலித்து பாக்ஸ் ஆபீசை மிரள வைத்துள்ளது.
Also Read : திரும்பும் பக்கம் எல்லாம் கொட்டும் பணமழை.. பொன்னியின் செல்வனால் லைக்காவுக்கு கிடைத்த புதையல்
அதுமட்டுமின்றி தமிழகத்தில் ஒரே வாரத்தில் ரூபாய் 130 கோடியை வசூலித்து சாதனை படைத்திருக்கிறது. மேலும் விடுமுறை நாட்களான சனி ஞாயிற்றுக் கிழமைக்கு பிறகு பொன்னியின் செல்வன் படத்தின் வசூல் 400 கோடியை எட்டி இருக்கிறது.
இந்தியாவில் மட்டுமல்ல உலக அளவில் பொன்னியின் செல்வன் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அதிலும் குறிப்பாக லைக்கா தயாரிப்பில் ரஜினி நடிப்பில் வெளியான 2.o படம் அமெரிக்காவில் வசூலித்த மொத்த வசூலை 10 நாட்களுக்குள் வசூலித்து சாதனை படைத்திருக்கிறது மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன்.
Also Read : விஜய் தவறவிட்ட சூப்பர் ஹிட் 5 படங்கள்.. பொன்னியின் செல்வன் படத்தில் இந்த கேரக்டரா?
அமெரிக்காவில் ரஜினியின் 2.o படம் $5.50 M வசூலித்தது. அதை முறியடித்து பத்தே நாட்களில் பொன்னியின் செல்வன் அமெரிக்காவில் 2.O படத்தை மிஞ்சி வசூல் வேட்டையாடிக் கொண்டிருக்கிறது என்பது பெருமைக்குரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.
முதல் பாகத்திற்குகே இப்படி ஒரு வரவேற்பு கிடைத்துக் கொண்டிருக்கும் நிலையில், இரண்டாம் பாகத்தை கண்டு திரையுலகமே நடுங்குகிறது. மேலும் பொன்னியின் செல்வன் படத்திற்கு முதல் நாளில் இருந்த வரவேற்பு தான் பத்தாவது நாளிலும் இருப்பதால் இந்தப் படம் இன்னும் சில வாரங்களிலேயே 1000 கோடியை அசால்டாக தொடும் என்று திரை விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
Also Read : இந்த ஆண்டு வசூல் வேட்டை ஆடிய டாப் 5 படங்கள்.. விக்ரம் படத்தை விரட்டிப் பிடிக்கும் பொன்னியின் செல்வன்