திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

பொன்னியின் செல்வன் படத்தை பார்ப்பது சாபக்கேடு.. வறுத்தெடுக்கும் ப்ளூ சட்டை மாறன்

பெரும்பாலும் ரசிகர்கள் திரையரங்குக்கு சென்று படத்தை பார்ப்பதற்கு முன்னதாக சினிமா விமர்சகர்கள் கொடுக்கும் விமர்சனத்தை பார்த்துவிட்டு, படம் நன்றாக இருந்தால் மட்டுமே தியேட்டருக்கு சென்று பார்க்கிறார்கள். இதனால் சில மோசமான விமர்சனங்களால் படம் நஷ்டத்தை சந்திப்பதாக தயாரிப்பாளர்கள் கூறி வருகிறார்கள்.

இந்நிலையில் சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் யூடியூப் சேனலுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அவர் கொடுக்கும் விமர்சனத்தை பார்க்க ரசிகர்கள் காத்துக் கிடக்கின்றனர். அந்த வகையில் நேற்று வெளியான மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் படத்தை பற்றி தனது யூடியூப் சேனலில் விமர்சனம் செய்துள்ளார்.

Also Read : விக்ரம் படத்தை பின்னுக்கு தள்ளிய பொன்னியின் செல்வன்.. முதல் நாளே கோடிகளை குவித்து வசூல்

ஆரம்பத்தில் முதல் ஐந்து நிமிடங்களில் படத்தை பற்றி ஆகா ஓகோ என்று பேசி இருந்தார். ஆனால் அதன்பின்பு இந்த விமர்சனம் படத்தைப் பார்த்துவிட்டு முட்டு கொடுப்பவர்களுக்கு என அந்தர்பல்டி அடித்தார். இதை தொடர்ந்து படத்தைப் பற்றி மோசமாக விமர்சித்து கிழித்து தொங்கவிட்டார்.

பொன்னியின் செல்வன் படம் எந்த ஒரு உணர்வையுமே கொடுக்கவில்லை. எந்தப் கதாபாத்திரத்தை பின் தொடர்வது என்றே தெரியவில்லை. ஒட்டுமொத்தமாக படம் ரசிகர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த படத்தில் இருந்த ஒரே புத்திசாலி வைரமுத்து தான்.

Also Read : கார்த்தி, மணிரத்னத்துடன் உதவி இயக்குனராக வேலை செய்த 3 படங்கள்.. அசால்டாக சமாளிக்கும் வந்தயத்தேவன்

அவரையும் படம் ஆரம்பிக்கும் போதே மணிரத்தினம் கழட்டி விட்டுட்டார். மேலும் இது தமிழர் படம் இல்லை, தெலுங்கு படம் என்று படத்தை எடுத்த ஓனரம்மா சுஹாசினி மணிரத்தினமே சொல்லிவிட்டார். பொன்னியின் செல்வன் கதையையே ஒரு சாப கதை என்று சொல்வார்கள். ஏனென்றால் எம்ஜிஆர் முதல் பலர் இந்த படத்தை எடுக்க ஆரம்பித்து முடியாமல் போனது.

ஒருவழியாக மணி சார் எடுத்து முடித்துள்ளார். ஆனால் இப்போதுதான் தெரிகிறது படம் எடுத்தவருக்கு சாபக் கதை இல்லை, படம் பார்த்தவனுக்கு தான் சாபக் கதை என பொன்னியின் செல்வன் படத்தை வறுத்தெடுத்துள்ளார். இதைப் பார்த்த பொன்னியின் செல்வன் ரசிகர்கள் வேண்டுமென்றே ப்ளூ சட்டை மாறன் இப்படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்களை பரப்புவதாக குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.

Also Read : வசூல் வேட்டையில் பொன்னியின் செல்வன்.. முதல் நாள் கலெக்ஷன் எவ்வளவு தெரியுமா?

Trending News