மணிரத்னம் இயக்கத்தில் பல முன்னணி நட்சத்திரங்களின் நடிப்பில் இரண்டு பாகங்களாக உருவாகியிருக்கும் படம் பொன்னியின் செல்வன். இப்படத்தின் முதல் பாகம் வருகின்ற செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகயுள்ளது.
பொன்னியின் செல்வன் படம் வெளியாவதற்கு இன்னும் மூன்று மாதங்கள் உள்ள நிலையில் இப்போதே படத்திற்கான பிரமோஷனை தொடங்கிவிட்டது படக்குழு. முதலில் இப்படத்தில் உள்ள முக்கியமான கதாபாத்திரங்களின் புகைப்படங்கள் வெளியிட்டு வந்தது.
இந்நிலையில் இப்படத்தின் டீஸர் பிரம்மாண்டமாக வெளியானது. அதுமட்டுமல்லாமல் இணையத்தில் டீசர் வெளியாகி 24 மணி நேரத்திலேயே 30 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சென்றுள்ளது. மேலும் இப்படத்திற்கு ஏஆர் ரகுமானின் இசையும் பலம் சேர்த்துள்ளது.
மேலும் பொன்னியின் செல்வன் படம் ஒட்டுமொத்த உலக சினிமாவையும் திரும்பிப் பார்க்க வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் வெளியாக உள்ள பொன்னியின் செல்வன் படத்தின் ரிலீஸ் பிரம்மாண்டமாக இருக்க வேண்டும் என தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது.
அதிலும் தமிழ் மொழியைத் தாண்டி, மற்ற மொழிகளிலும் பொன்னியின் செல்வன் படத்தின் ரிலீஸ் பிரம்மாண்டமாக இருக்க வேண்டும் என லைகா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் மற்றும் கன்னட மொழியில் யாஷ் நடிப்பில் வெளியான கே ஜி எஃப் 2 போன்ற படங்களை விட பிரம்மாண்டமாக வெளியிடவுள்ளனர்.
இதனால் மற்ற மொழிகளிலும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. சமீபத்தில் லோகேஷ் இயக்கத்தில் வெளியான விக்ரம் படம் வசூல் வேட்டை ஆடி வரும் நிலையில் அடுத்ததாக பொன்னியின் செல்வன் படமும் பிரம்மாண்ட வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் ஆயிரம் கோடி வசூல் கன்ஃபார்ம் என ரசிகர்கள் இப்போதே ஆர்ப்பரித்து வருகின்றனர்.