சோழ மன்னன் ராஜ ராஜனின் வாழ்க்கையை மையமாக கொண்டு புனையப்பட்ட நாவல் பொன்னியின் செல்வன் இதை அமரர் கல்கி எழுதி இருந்தார். இந்த நாவலை இயக்குனர் மணிரத்தினம் இரண்டு பாகங்களாக படமாக்கி இருக்கிறார். இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், விக்ரம் பிரபு, பிரபு, நாசர், பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடித்திருக்கின்றனர்.
பொன்னியின் செல்வன் திரைப்படம் கடந்த மாதம் 30 ஆம் தேதி ரிலீஸ் ஆனது. இந்த படம் எதிர்பார்த்ததை விட நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்துடன் ரிலீஸ் ஆன தனுஷின் நானே வருவேன் திரைப்படத்திற்கு தியேட்டர்கள் கொடுக்க முடியாத அளவிற்கு இந்த படத்தின் புக்கிங் இருந்தது.
மெட்ராஸ் டாக்கீசும், லைக்கா ப்ரொடக்சனும் இணைந்து 570 கோடியில் தயாரித்த இந்த பொன்னியின் செல்வன் படம் தமிழகத்தில் மட்டுமே 200 கோடி வசூல் செய்து விட்டது. ரிலீசான 17 நாட்களில் 200 கோடி வசூல் செய்த முதல் தமிழ்ப்படம் என்னும் சாதனையை பொன்னியின் செல்வன் பெற்று இருக்கிறது.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்ற திரைப்படம் விக்ரம். இந்த படம் மொத்தம் 446 கோடி வசூல் செய்தது. ஆனால் பொன்னியின் செல்வன் திரைப்படம் ரிலீஸ் ஆன 17 நாட்களிலேயே உலக அளவில் 450 கோடி வசூல் செய்து கமலஹாசனின் சாதனையை முறியடித்து இருக்கிறது.
இந்நிலையில் இந்த திரைப்படத்தின் வசூல் விரைவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 2.0 படத்தின் வசூலை முறியடிக்கும் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. சங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்ஷய்குமார், எமி ஜாக்சன் நடித்த இந்த படம் 800 கோடி வசூலித்திருந்தது. இப்போது 500 கோடியை நெருங்கும் பொன்னியின் செல்வன் அந்த 800 கோடி சாதனையை முறியடிக்குமா என பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
சமீபத்தில் இந்திய அளவில் ட்ரெண்டாகி கொண்டிருக்கும் காந்தாரா திரைப்படம் தமிழ் ரிமேக்கில் ரிலீஸ் ஆகி இருக்கிறது. மேலும் தீபாவளிக்கு சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் மற்றும் கார்த்தியின் சர்தார் ரிலீஸ் ஆக இருக்கிறது. இதையெல்லாம் தாண்டி பொன்னியின் செல்வனின் பட புக்கிங் இதுவரை நன்றாகவே சென்று கொண்டிருக்கிறது.
Also Read: 4 நாட்களில் இவ்வளவு கோடி வசூலா.. பொன்னியின் செல்வன் ஹாட்ரிக் வெற்றி