கல்கியின் பொன்னியின் செல்வன் வரலாற்று நாவலை திரைப்படமாக எடுக்க வேண்டும் என்பது பிரபல இயக்குனர் மணிரத்னத்தின் நீண்ட நாள் கனவு. இதனை இரண்டு பக்கங்களாக எடுக்க வேண்டும் என திட்டமிட்டிருக்கும் மணிரத்தினம் முதல் பாகத்தை நல்லபடியாக எடுத்து முடித்திருக்கிறார்.
பொன்னின் செல்வன் படத்தின் முதல் பாகத்தை வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், தமிழ், கன்னடம் உள்ளிட்ட 5 மொழிகளில் உலகெங்கும் ரிலீஸ் ஆகிறது. அதற்கு முன்பு இந்தப் படத்திற்கு ஏஆர் ரகுமான் இசை அமைத்திருக்கும் பாடல்களின் ஆடியோ லான்ச் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.
இதில் ரஜினி, கமல் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொள்கின்றனர். பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஆதித்த கரிகாலன் கதாபாத்திரத்தில் நடித்த விக்ரம் கெட்டப்பை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இதில் விக்ரம் குதிரைமேல் கம்பீரமாக காட்சியளிக்கிறார். இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரல் ஆகிறது.
ஏற்கனவே விக்ரமின் கெட்டப் இணையத்தில் லீக் ஆனது என பல வதந்திகள் கிளம்பிய நிலையில், அதை தற்போது படக்குழுவே வெளியிட்டு இதுதான் விக்ரமின் கெட்டப் என உறுதிப்படுத்துகிறது. 800 கோடி பொருட்செலவில் இரண்டு பாகங்களாக உருவாக உள்ள பொன்னின் செல்வன் திரைப்படத்தின் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் சிறப்பாக தேர்ந்தெடுத்து மணிரத்தினம் இயக்கியிருக்கிறார்.
இந்தப் படத்தில் விக்ரம் மட்டுமல்ல தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழி முன்னணி நடிகர்கள் பலர் இதில் நடித்திருக்கின்றனர். குறிப்பாக இதில் வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் கார்த்தி, சுந்தரசோழன் கதாபாத்திரத்தில் அமிதாப்பச்சன், நந்தினி கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராய். அருள்மொழி வர்மன் கதாபாத்திரத்தில் ஜெயம் ரவி குந்தவை கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ், பழுவேட்டையர் கதாபாத்திரத்தில் சத்யராஜ் என திரையுலக முன்னணி பிரபலங்கள் அவர்களுக்கு கச்சிதமாக பொருந்தும் கதாபாத்திரத்தில் ஏற்று நடித்திருக்கின்றனர்.
மேலும் இதில் இவர்கள் மட்டுமல்லாமல் நயன்தாரா, த்ரிஷா, பார்த்திபன், ரகுமான், ஜெயராம், அமலா பால் என பல நடிகை நடிகர்கள் நடிக்கின்றனர். எனவே சோழர் பரம்பரையை கண்முன் நிறுத்தும் பொன்னியின் செல்வன் படத்தை வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி திரையில் பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.