திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

முன்பதிவில் பல கோடி லாபம் பார்த்த பொன்னியின் செல்வன்.. மிரள விட்ட மணிரத்னம்

பொன்னியின் செல்வன் நாவலின் தீவிர ரசிகர்கள் அனைவரும் தற்போது மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் அந்த திரைப்படத்தை காண ஆவலுடன் காத்திருக்கின்றனர். வரும் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்த திரைப்படம் ஒட்டுமொத்த திரையுலகினரின் ஆவலையும் தூண்டி இருக்கிறது.

மேலும் இப்படத்தின் ப்ரோமோஷன் அனைத்தும் தற்போது பட குழுவினரால் மும்முரமாக செய்யப்பட்டு வருகிறது. அதே வேளையில் படத்தின் டிக்கெட் முன்பதிவு எதிர்பாராத அளவுக்கு லாபத்தை கொடுத்திருக்கிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது.

Also read : மாஸ் காட்டும் பொன்னியின் செல்வன்.. தெரியாமல் தலையை விட்டோமோ என புலம்பும் தனுஷ்

ஆரம்பித்த சிறிது நேரத்திற்குள்ளாகவே ரசிகர்கள் போட்டி போட்டுக் கொண்டு டிக்கெட் முன்பதிவு செய்ய ஆரம்பித்தனர். அந்த வகையில் தற்போது வரை 6 லட்சம் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அதிலும் அதிகாலையில் தொடங்கும் முதல் காட்சிக்கான டிக்கெட் தற்போது ஹவுஸ் ஃபுல் ஆகி இருக்கிறதாம்.

அந்த வகையில் பொன்னியின் செல்வனின் டிக்கெட் முன்பதிவு எட்டு கோடி ரூபாய் வரை வசூலித்து சாதனை படைத்துள்ளது. இதற்கு முன்னதாக பீஸ்ட், வலிமை போன்ற திரைப்படங்கள் டிக்கெட் முன்பதிவில் முன்னிலையில் இருந்தது. அதற்கு அடுத்து வந்த விக்ரம் திரைப்படம் அந்த சாதனைகளை முறியடித்தது.

Also read : கல்கியின் பொன்னியின் செல்வன் படிக்காதவரா? மணிரத்தினத்தின் படம் பார்ப்பதற்கு முன் இத தெரிஞ்சுட்டு போங்க

இந்த படங்களின் சாதனையை பொன்னியின் செல்வன் முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் மணிரத்தினம் தற்போது பலரையும் மிரட்டி இருக்கிறார். அதனாலேயே இந்த படத்தை திருவிழா போல் கொண்டாட தயாராகி இருக்கும் ரசிகர்கள் ரிலீஸ் நாளை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இரண்டு பாகங்களாக உருவாகி இருக்கும் இந்த திரைப்படம் உலக அளவில் இன்னும் பல சாதனைகள் புரியும் என்று கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் இந்த திரைப்படத்தால் தமிழ் சினிமாவின் தரம் இன்னும் உயரும் என்பதில் சந்தேகம் இல்லை.

Also read : உயிரைக் கொடுத்து எடுத்த மணிரத்னம், சோலியை முடித்த சுஹாசினி.. கழுவி ஊற்றும் ப்ளூ சட்டை மாறன்

Trending News