செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

மணிரத்தினத்தை தூக்கி சாப்பிட்ட ரஜினி.. சூப்பர் ஸ்டார் கற்பனையில் பொன்னியின் செல்வன்

மணிரத்தினம் பிரம்மாண்ட பொருட் செலவில் பொன்னின் செல்வன் படத்தை எடுத்த முடித்துள்ளார். இப்படம் வருகின்ற செப்டம்பர் 30-ஆம் தேதி பான் இந்திய படமாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் சமீபத்தில் பொன்னின் செல்வன் படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.

இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமலஹாசன் ஆகியோர் பங்கு பெற்றிருந்தனர். இந்நிலையில் விழாவில் பேசிய ரஜினிகாந்த் அசுர திறமையான மனிதர் தான் மணிரத்தினம், அந்த காலகட்டத்தில் முதல், இரண்டாம் பாகம் என்றெல்லாம் எடுக்க முடியாது. அதனால்தான் பொன்னின் செல்வன் படம் எடுக்க முடியவில்லை.

Also Read :பொன்னியின் செல்வன் பட விழாவிற்கு வராத ஒரே பிரபலம்.. பழிக்கு பழிதீர்த்த மணிரத்தினம்

ஆனால் இப்போது மணிரத்தினம் அதை செய்து முடித்துள்ளார். மேலும் படையப்பா படத்தில் நீலாம்பரி கதாபாத்திரம் பொன்னின் செல்வன் நாவலில் உள்ள நந்தினி கதாபாத்திரத்தின் இன்ஸ்பிரேஷன் தான். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் ஒரு பேட்டியின் போது பொன்னியின் செல்வன் படத்தில் வந்தியத்தேவன் கேரக்டரில் யார் நடித்தால் நன்றாக இருக்கும் என்ற கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு ஜெயலலிதா ரஜினி நடித்தால் நன்றாக இருக்கும் என கூறினார், அவர் அப்படி சொன்னது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. மேலும் பொன்னியின் செல்வன் படத்தில் பெரிய பழவேட்டரையர் கதாபாத்திரத்தில் நடிக்கவா என்ற மணிரத்தினத்திடம் கேட்டிருந்தேன்.

Also Read :பொன்னின் செல்வன் படத்திற்குப் பின் மார்க்கெட்டை பிடிக்கும் த்ரிஷா.. லோகேஷ்க்கு இப்படி ஒரு ஆசையா.?

ஆனால் ரசிகர்கள் இதை ஒத்துக் கொள்ள மாட்டார்கள் என்பதால் மணிரத்தினம் மறுத்துவிட்டார். மேலும் அப்போதே நான் பொன்னியின் செல்வன் படத்திற்கு சில கதாபாத்திரங்களை தேர்வு செய்து வைத்திருந்தேன். அதாவது வந்தியத்தேவனாக ரஜினியும், அருள்மொழி வர்மனாக கமலஹாசனையும் யோசித்து வைத்துள்ளார் ரஜினி.

மேலும், ஆதித்ய கரிகாலன் கதாபாத்திரத்தில் விஜயகாந்த், நந்தினி கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகை ரேகா, குந்தவையாக ஸ்ரீதேவி, பூங்குழலி கதாபாத்திரத்தில் ராதா மற்றும் பெரிய பழவேட்டரையர் கதாபாத்திரத்தில் சத்யராஜ் ஆகியோர் என் கற்பனையில் இருந்ததாக ரஜினி கூறியிருந்தார்.

Also Read :சூப்பர் ஸ்டார் ஆசைப்பட்ட பொன்னியின் செல்வன் கேரக்டர்.. வாய்ப்பு கேட்டும் கொடுக்க மறுத்த மணிரத்தினம்

Trending News