சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

8 வயது மகளிடம் அத்துமீறிய காமுகன்.. அப்பாவால் 7 வருடம் சித்ரவதை அனுபவித்த பூ நடிகை

ஒரு காலத்தில் தன்னுடைய அழகாலும், அற்புதமான நடிப்பாலும் திரையுலகை ஆட்டி படைத்தவர் தான் அந்த பூ நடிகை. இப்போதும் கூட அவர் லைம் லைட்டில் ஜொலித்துக் கொண்டுதான் இருக்கிறார். இப்படி நட்சத்திர அந்தஸ்துடன் இருக்கும் நடிகை எப்போதுமே மனதில் பட்டதை தைரியமாக பேசக் கூடியவர்.

அதனால் எத்தனை விதமான எதிர்ப்புகள் வந்தாலும் அவர் கண்டுகொள்ள மாட்டார். இப்படி ஒரு சிங்க பெண்ணாக வலம் வரும் இவர் சிறுவயதில் அனுபவித்த வேதனைகள் கொஞ்ச நஞ்சம் அல்ல. அதிலும் தன்னை பெற்ற அப்பாவாலேயே இவர் சித்திரவதை செய்யப்பட்டுள்ளார் என்ற விஷயம் தற்போது வெளியாகி அதிர்ச்சியை கிளப்பி இருக்கிறது.

Also read: காஞ்ச மாடு போல கொடூரமாய் பாய்ந்த ஹீரோ.. வெறிபிடித்த சைக்கோ என கண்ணீரோடு கதறிய நடிகை

அதாவது நடிகைக்கு எட்டு வயது இருக்கும் போதிலிருந்தே அவருடைய அப்பா அவரை உடல் ரீதியாக துன்புறுத்துவாராம். சிறு குழந்தையான நடிகை அப்போது இதைப்பற்றி யாரிடம் சொல்வது என்று தெரியாமல் பயந்து நடுங்கி இருக்கிறார். கிட்டத்தட்ட ஏழு வருடம் இந்த கொடுமை நடந்து இருக்கிறது.

அது மட்டுமல்லாமல் கணவனே கண்கண்ட தெய்வம் என வாழும் தன் அம்மா இதை நம்புவாரா என்ற சந்தேகமும் அவருக்கு இருந்திருக்கிறது. ஏனென்றால் தன்னுடைய கணவர் என்னதான் அடித்தாலும், மிதித்தாலும் அவர் மட்டும்தான் உலகம் என்று நடிகையின் அம்மா வாழ்ந்திருக்கிறார். அதன் பிறகு நடிகை தன்னுடைய 15-வது வயதில் தன் தந்தையை எதிர்த்து நின்று இருக்கிறார்.

இதை எதிர்பார்க்காத அந்த காமுகன் தன் குடும்பத்தை அம்போ என விட்டுவிட்டு எஸ்கேப் ஆகி இருக்கிறார். அதன் பிறகு சாப்பாட்டிற்கு கூட வழியில்லாமல் திண்டாடிய நடிகை ஒருவழியாக சினிமாத்துறைக்குள் வந்திருக்கிறார். நடிக்க வந்த வேகத்திலேயே அடுத்தடுத்த ஹிட் படங்களை கொடுத்து முன்னணி இடத்திற்கு வந்த நடிகை தற்போது நடிப்பை தாண்டி பல துறைகளிலும் ஜொலித்துக் கொண்டிருக்கிறார்.

Also read: 66 வயது நடிகர் உடன் நெருக்கமான 31 வயது நடிகை.. 30 முறைக்கு மேல் எடுத்த லிப் லாக் சீன்

Trending News