Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

விமர்சனங்களை உடைக்கும் பூஜா ஹெட்டே.. 3 பிரம்மாண்ட படங்களுடன் பதிலடி

விமர்சனங்களை உடைக்கும் பூஜா ஹெட்டே.. 3 பிரம்மாண்ட படங்களுடன் பதிலடி

Pooja Hegde : முகமூடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் தான் பூஜா ஹெக்டே. அந்த படம் பெரிய வரவேற்பு பெறாத நிலையில் தெலுங்கு பக்கம் சென்றார். அங்கு பிரபாஸுடன் நடித்த ராதே ஷ்யாம் படமும் தோல்வியை […]

Pooja Hegde : முகமூடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் தான் பூஜா ஹெக்டே. அந்த படம் பெரிய வரவேற்பு பெறாத நிலையில் தெலுங்கு பக்கம் சென்றார். அங்கு பிரபாஸுடன் நடித்த ராதே ஷ்யாம் படமும் தோல்வியை தழுவியது. அடுத்ததாக விஜயுடன் பீஸ்ட் படத்தில் நடித்திருந்தார்.

இந்தப் படமும் சரியாக போகவில்லை. ரன்வீர் சிங்குடன் சர்க்கஸ் என்ற படத்தில் நடித்த நிலையில் அதுவும் எதிர்பாராத விதமாக தோல்வியை தழுவியது. இதனால் பூஜா ராசியில்லாத நடிகை என விமர்சிக்கப்பட்டு வந்தார். மேலும் சமீபத்தில் சூர்யாவின் ரெட்ரோ படத்திலும் நடித்திருந்தார்.

இந்த படமும் டூரிஸ்ட் ஃபேமிலி படத்தால் வரவேற்பு பெறவில்லை. இப்போது தன்னை விமர்சிப்பவர்களுக்கு பதிலடி கொடுக்கும்படி மூன்று பிரம்மாண்ட படங்களில் பூஜா ஹெட்டே கமிட்டாகி இருக்கிறார். அந்த வகையில் லோகேஷ், ரஜினி கூட்டணியில் உருவாகும் கூலி படத்தில் நடித்துள்ளார்.

பூஜா ஹெக்டே கைவசம் இருக்கும் மூன்று படங்கள்

அதுவும் இந்த படத்தில் கேமியோ கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அடுத்ததாக அரசியல் கதை சார்ந்து உருவாகும் விஜய்யின் ஜனநாயகன் படத்திலும் நடிக்கிறார். ஏற்கனவே விஜய் உடன் பீஸ்ட் படத்தில் கூட்டணி போட்ட இவர் மீண்டும் இணைந்து இருக்கிறார்.

குறிப்பாக விஜய்யின் கடைசி படத்தில் பூஜா ஹெட்டே நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. மேலும் லாரன்ஸ் நடிப்பில் உருவாகும் காஞ்சனா 4 படத்திலும் பூஜா ஹெட்டே தான் நடிக்கிறார். இவ்வாறு பெரிய படங்களில் அடுத்தடுத்த இவருக்கு வாய்ப்பு கிடைத்து வருகிறது.

மேலும் இந்த மூன்று படங்களுமே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. இவை அடுத்தடுத்து ஹிட் ஆனால் பூஜா ஹெக்டே நம்பர் ஒன் இடத்திற்கு வருவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.