வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

மாயாவுக்கு கட்டம் கட்டிய பூர்ணிமா.. இனிமேதான் ஆட்டமே ஆரம்பம்

BB7 Tamil Poornima: பிக் பாஸ் விளையாட்டை பொருத்த வரைக்கும் அதில் உண்மையான நட்பு என்பது இருக்கவே இருக்காது. முகத்திற்கு முன் நன்றாக பேசிவிட்டு, பின்னால் குத்துவது தான் இதுவரை நடந்த சீசன்களில் பார்த்து இருக்கிறோம். ஆனால் இந்த ஏழாவது சீசனில் மாயா மற்றும் பூரணிமாவின் நெருக்கம் எல்லோருக்குமே இது உண்மைதானா என்ற கேள்வியை எழுப்பி இருந்தது.

வைல்ட் கார்டு கண்டஸ்டண்ட் ஆக அர்ச்சனா உள்ளே நுழைந்த ஒரு சில நாட்களிலேயே மாயா மற்றும் பூர்ணிமாவின் உண்மை முகத்தை கண்டுபிடித்து விட்டார். மாயாவால் பூர்ணிமா இல்லாமல் இந்த கேம் விளையாட முடியாது, பூர்ணிமா எல்லோரையும் காலி செய்து விட்டு, கடைசியாக மாயாவை கிளப்பத்தான் திட்டமிட்டு இருக்கிறார் என்றும் அர்ச்சனா சொல்லி இருந்தார்.

கமலஹாசன் எபிசோடுக்கு பிறகு மாயா பின் வாங்குவதை கண்டுபிடித்து விட்டார் பூர்ணிமா. நேற்றைய எபிசோடில் கூட விசித்ரா மற்றும் அர்ச்சனாவுக்கு சப்போர்ட் செய்து மாயா பூர்ணிமாவிடம் பேசி இருந்தார். இதனால் பூர்ணிமா மற்றொரு திட்டத்தை போட்டு மாயாவை கவுக்க ரெடி ஆகி இருக்கிறார். இதை நேற்றிலிருந்து தொடங்கி விட்டார்.

Also Read:மாயாவின் கூட்டணியை அசைத்துப் பார்க்கும் நாமினேஷன்.. டேஞ்சர் சோனில் இருக்கும் 2 பேர்

விஷ்ணுவுக்கு பூர்ணிமா மீது கிரஷ் இருப்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான். விஷ்ணு இதை சாப்ட் கார்னர் என்று சொல்லி அதோடு முடித்துக் கொள்கிறார். ஆனால் விஷ்ணு தன்னிடம் என்ன முயற்சி செய்கிறார் என்பது பூர்ணிமாவுக்கு நன்றாகவே தெரியும். அதே நேரத்தில் பூர்ணிமா மாயா உடன் இருப்பது விஷ்ணுவுக்கு பிடிக்காது என்பதும் தெரியும்.

மாயாவுக்கு பூர்ணிமா மீது கிரஷ் இருப்பதாக தெரிகிறது. இது மிகவும் சென்சிடிவ் ஆன விஷயம் என்பதால் வெளியில் அதிகமாக பேசப்படுவது இல்லை. பூர்ணிமா, விஷ்ணுவிடம் பேசுவது மாயாவுக்கு சுத்தமாக பிடிக்காது. இதை நன்றாக தெரிந்து கொண்ட பூர்ணிமா நேற்றிலிருந்து விஷ்ணுவிடம் நெருங்கி பழகுவது போல் காட்டிக் கொள்கிறார்.

பூர்ணிமா விஷ்ணுவிடம் நெருங்கி பழகினால் அது மாயாவுக்கு சுத்தமாக பிடிக்காது. மாயா, விஷ்ணுவுக்கு எதிராக வேலையை தொடங்குவார். விஷ்ணு தன்னை சும்மா சீண்டிவிட்டாலே கதற விட்டுவிடுவார். இதனால் மாயா மற்றும் விஷ்ணு இருவரின் பெயருமே இந்த வாரம் டேமேஜ் ஆகிவிடும் என்பதுதான் பூர்ணிமாவின் ஐடியா.

Also Read:மாயா கூட்டணிக்கு ஜால்ரா போட்ட பிக்பாஸ்.. தினேஷ் கேப்டன்சிக்கு வச்ச பெரிய செக்

Trending News