தன்னைச் சுற்றி பல சர்ச்சைகளை வைத்துக் கொண்டு எப்போதும் பரபரப்பாக இருப்பவர் அந்த பிரபல நடிகர். நடிப்பில் குறை சொல்ல முடியாவிட்டாலும் அவரின் சொந்த வாழ்க்கை பல பிரச்சனைகளை உள்ளடக்கியது. சமீபத்தில் நடிகர் நடந்துகொள்ளும் விதத்தைப் பார்த்து அனைவரும் எரிச்சல் அடைந்து வருகின்றனர்
அதற்கு முக்கிய காரணம் நடிகர் பெண்கள் விஷயத்தில் ரொம்பவும் வீக்காம். சக நடிகைகளை தன் கன்ட்ரோலில் வைத்துக் கொள்வதில் நடிகர் மிகவும் கில்லாடியாம். அப்படி அவரின் கட்டுப்பாட்டில் இருக்கும் நடிகைகளின் கணக்கு எடுத்தால் அது நீண்டு கொண்டுதான் போகும்.
எப்போதும் பார்ட்டி, கொண்டாட்டம் என்று வளையவரும் நடிகர், நட்பு வட்டாரங்கள் உடன் எப்பொழுதும் மது ,மாது என இரவைக் கழிக்கும் பழக்கம் கொண்டவர். குறிப்பாக எல்லாவிதமான கேளிக்கை விருந்துகளையும் ஒன்றாகத்தான் ருசி பார்க்கலாம். அப்படி ஒரு ஜாலியான கூட்டங்களாம் அது.
இப்படி இவர்களால் பாதிக்கப்பட்ட பிரபலங்களில் ரொம்ப அதிகமாக பாதிக்கப்பட்டது அந்த பாடகி தான். பாவம் இவர்களால் பாடகி தன் வாழ்க்கையை தொலைத்து விட்டு தற்போது தனிமரமாக நிற்கிறார். இவர்களை பற்றிய உண்மையை தைரியமாக பொது வெளியே சொல்ல வந்த அவரை திரைத்துறையில் இருந்து காணாமல் போகச் செய்வதில் அவர்களுக்கு பெரும் பங்கு உண்டு.
அவ்வளவு மோசமான இவர்களுக்குள் இடையில் ஏற்பட்ட தகராறில் அந்த இசைக்கு பெயர் போனவர் தற்போது பிரபல நடிகரிடம் கூட்டு சேர்ந்து விட்டார். கொஞ்சம் கொஞ்சமாக குடும்பத்தில் பிரச்சினை வந்து தற்போது பிரியும் சூழ்நிலை ஏற்பட்டு விட்டதாம்.