வியாழக்கிழமை, ஜனவரி 2, 2025

மைக் மோகனை பின்பற்றும் பழைய பீஸ்.. தம்பி நாங்க உங்களுக்கு சீனியர்பா

ஒருகாலத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக பல திரைப்படங்களில் நடித்து வெள்ளி விழா நாயகனாக வலம் வந்தவர் மைக் மோகன். உச்சத்தில் இருந்த இவருடைய மார்கெட் ஒரு சில வதந்திகளால் திடீரென சரிய ஆரம்பித்தது. அதிலிருந்து இவரை நாம் அதிக படங்களில் காண முடியாமல் போய்விட்டது.

இதனால் சினிமா துறையை விட்டு சிறிது காலம் ஒதுங்கி இருந்த மைக் மோகன் தற்போது மீண்டும் ஹீரோவாக ஒரு புதிய படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுக்க இருக்கிறார். இதுகுறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு சில நாட்களுக்கு முன்னர் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

தற்போது இவரை பார்த்து தமிழ் சினிமாவின் வெற்றி நடிகராக நடைபோட்ட மற்றொரு பிரபலம் ரீ என்ட்ரி கொடுக்க ஆசைப்படுகிறார். மைக் பிடித்து பாட்டு பாடும் கேரக்டரில் நடித்து பிரபலமானதால் தான் அவர் மைக் மோகன் என்று அழைக்கப்பட்டார்.

அவரைப் போன்றே பாட்டு பாடியே தன் படத்தை வெற்றிப்படமாக மாற்றிய நடிகர் தான் ராமராஜன். இவரின் நடிப்பில் வெளிவந்த பல திரைப்படங்கள் 100 நாட்களுக்கும் மேல் ஓடி சாதனை புரிந்தது. இதனால் இவர் தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத ஒரு நடிகராக உருவெடுத்தார்.

இது எல்லாம் சில காலம் வரைதான். கிராமத்து கதைகளில் மட்டுமே நடித்து வந்த இவர் மற்ற நடிகர்களைப் பார்த்து நகரப் பின்னணியில் திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பித்தார். ஆனால் அது அவருடைய ரசிகர்களுக்கு பிடிக்காமல் போனது. பின்னர் வரிசையாக அமைந்த தோல்வி படங்களால் இவர் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தார்.

அரிதாக சில இயக்குனர்கள் அவரிடம் கதை சொல்ல வந்தாலும் நான் ஹீரோவாக மட்டும்தான் நடிப்பேன் என்று அடம்பிடித்து வந்தார். இதனால் இவருக்கு வர இருந்த சில வாய்ப்புகளும் பறிபோனது. தற்போது மோகன் திரைப்படத்தில் நடித்து வருவதால் ராமராஜன் மீண்டும் சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு பல இயக்குனர்களிடம் கதை கேட்டு வருகிறார்.

இதனால் வெகு விரைவில் அவரை மீண்டும் திரைப்படங்களில் காணலாம் என்கிறது அவருக்கு நெருங்கிய வட்டாரம். ஒருவேளை அவர் அப்பா கேரக்டரில் நடிக்க சம்மதித்து விட்டாரா அல்லது பழையபடி ஹீரோவாக நடித்து நமக்கு அதிர்ச்சி கொடுப்பாரா என்று தெரியவில்லை.

Trending News