வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

கிருத்திகா உதயநிதியை நம்பி இருக்கும் கோமாளி தம்பி.. ஹாட்ரிக் தோல்வியால் மூடப்பட்ட கதவுகள்

Kiruthika Uthayanithi:அரசியல் குடும்பத்து மருமகளாக இருந்தாலும் ஒரு இயக்குனராக சாதித்துக் கொண்டிருக்கிறார் கிருத்திகா உதயநிதி. வணக்கம் சென்னை படம் மூலம் பிள்ளையார் சுழி போட்டோ இவர் காளி, சமீபத்தில் பேப்பர் ராக்கெட் என்ற வெப் சீரிஸ் ஆகியவற்றின் மூலம் முன்னேறி வருகிறார்.

அதைத் தொடர்ந்து தற்போது அவர் ஜெயம் ரவி, நித்யா மேனன் கூட்டணியை வைத்து காதலிக்க நேரமில்லை என்ற படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். போஸ்டர் உடன் வெளியான இந்த அறிவிப்பே படம் எப்போது வெளியாகும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தி இருந்தது.

Also read: சைரனை ஜெயம் ரவி மட்டும் நம்பி இல்ல.. 8 வருடத்திற்கு பின் ரீ என்ட்ரி கொடுக்கும் ஹீரோயின்

அதேபோல் ஜெயம் ரவியும் இப்படத்தை தான் பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறாராம். கோமாளி படத்திற்கு பிறகு இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இதில் பொன்னியின் செல்வன் மட்டுமே விதிவிலக்கு.

ஜெயம் ரவி சோலோ ஹீரோவாக நடித்த அகிலன், இறைவன், சைரன் போன்ற படங்கள் பெரிய அளவில் கவனம் ஈர்க்கவில்லை. அதனாலயே தற்போது இவர் கிருத்திகா உதயநிதியை பெரிதும் நம்பி இருக்கிறார். காதல், ரொமான்ஸ் கலந்து உருவாகி வரும் இப்படம் மே மாதம் வெளியாக இருக்கிறது.

வழக்கம்போல நித்யா மேனன் நடிப்பில் பட்டையை கிளப்பி இருக்கிறாராம். அது மட்டுமல்லாமல் ஜெயம் ரவியுடன் வரும் காட்சிகளும் ரசிக்கும் வகையில் வந்திருக்கிறதாம். ஆக மொத்தம் அடுத்தடுத்த தோல்விகளால் அனைத்து கதவுகளும் மூடப்பட்ட நிலையில் ஜெயம் ரவி காதலிக்க நேரமில்லை மூலம் மீண்டும் பிஸியாவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also read: ஜெயம் ரவியின் மார்க்கெட்டை தூக்கி நிறுத்தியதா சைரன்.? 2 நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் ரிப்போர்ட்

Trending News