தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருக்கும் அந்த நடிகரின் இரண்டு மகள்களும் சினிமாவில் ரொம்ப பிரபலம். அதிலும் மூத்த மகளுக்கு மார்க்கெட் நன்றாகவே சென்று கொண்டிருக்கிறது. பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக அவர் நடித்து வருகிறார்.
தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் நல்ல மார்க்கெட் இருக்கும் அவர் தற்போது கைவசம் சில படங்களை வைத்திருக்கிறார். இப்படி அவரின் வாழ்வு ஏறுமுகமாக சென்று கொண்டிருக்க அவருடைய தங்கையின் சினிமா எண்ட்ரி சிக்கல்களை சந்தித்து வருகிறது.
அக்காவைப் போலவே தங்கையும் பெரிய நடிகரின் படத்தில் தான் அறிமுகமானார். ஆனால் அக்காவுக்கு ஒர்க் அவுட் ஆனது இவருக்கு மட்டும் ஒர்க்கவுட் ஆகவில்லை. ஏனென்றால் அக்கா அளவுக்கு தங்கைக்கு நடிப்பு சுத்தமாக வரவில்லை.
அவரை தங்கள் படங்களில் புக் செய்வதற்குள் பல இயக்குனர்களும் தயங்கி வருகின்றனர். அவர் நடிப்பில் வெளியான சில திரைப்படங்களும் அந்த அளவுக்கு கல்லா கட்டவில்லை. மேலும் இவர் அப்பாவின் பெயரை கூறிக்கொண்டு கெத்து காட்டி திரிவதால் பல இயக்குனர்களும் கடுப்பில் இருக்கின்றனர்.
அதுமட்டுமில்லாமல் அக்காவுக்கு காதல் வாழ்க்கை கூட அம்சமாக இருக்கிறது. ஒன்று போனால் இன்னொன்று என அவருக்கு வரிசையாக காதல் வந்து கொண்டிருக்கிறது. இப்படி அக்கா நடிகை பிரபலமாக இருக்க தங்கையோ வாய்ப்பு இல்லாமல் தவித்து வருகிறார்.
மேலும் அவர் குறைந்த பட்ஜெட்டில் நடித்த படங்கள் எதுவுமே ஓடவில்லை. இதனால் விரக்தி அடைந்த நடிகை தற்போது சினிமாவுக்கு முழுக்கு போடும் எண்ணத்தில் இருக்கிறார். அதனால் தான் சமீபத்தில் அவர் தனக்கு வந்த சில வாய்ப்புகளை கூட வேண்டாம் என்று மறுத்து விட்டதாக திரையுலகில் பேசப்பட்டு வருகிறது.