புதன்கிழமை, ஜனவரி 15, 2025

கண்டிஷன்களை அள்ளி வீசிய மனைவி.. பரிதாபமான சூழ்நிலையில் விவாகரத்து நடிகர்

எப்படி இருந்த மனுசன் இப்படி ஆயிட்டாரு அப்படின்னு சொல்ற அளவுக்கு இப்போ அந்த நடிகர் நிலைமை மாறிவிட்டது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக பல வெற்றித் திரைப்படங்களை கொடுத்து வந்த அந்த நடிகருக்கு தற்போது நேரமே சரியில்லை போல.

எங்கு திரும்பினாலும் ஏதாவது ஒரு பஞ்சாயத்து வந்து அவரை மூச்சு முட்ட வைக்கிறது. சமீபகாலமாக அவர் நடிப்பில் வெளியாகும் எந்த திரைப்படங்களும் பெரிய அளவில் ரீச் ஆகவில்லை. அதனால் நொந்து போன அந்த நடிகர் எப்படியாவது வெற்றிப்படத்தை கொடுக்க வேண்டும் என்று தீவிரமாக நடித்து வருகிறார்.

இதற்கிடையில் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக தற்போது விவாகரத்து முடிவுக்கும் நடிகர் தள்ளப்பட்டுள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான நடிகர் அவ்வப்போது தன் பிள்ளைகளை பார்ப்பதன் மூலம் சற்று மகிழ்ச்சியாக இருந்து வருகிறார்.

இப்போது அதற்கும் வேட்டு வைப்பது போன்ற ஒரு நிகழ்வு நடந்துள்ளது. விவாகரத்து அறிவிப்புக்கு பிறகு நடிகர் தன் பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக செலவிடும் போட்டோக்கள் அனைத்தும் மீடியாவில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

சமீபத்தில்கூட நடிகர் தன் பிள்ளைகளை அழைத்துக்கொண்டு அந்த இசை நிகழ்ச்சிக்கு சென்றது பயங்கர வைரல் ஆனது. இதன் மூலம் பிள்ளைகளுக்கு அப்பாவின் மேல் தான் அதிக பாசம் என்ற ஒரு தகவலும் ரசிகர்கள் மத்தியில் உருவானது.

இதையெல்லாம் பார்த்து கடுப்பான நடிகரின் மனைவி உடனே தன் பிள்ளைகளுடன் இருக்கும் புகைப்படத்தை பதிலுக்கு சோஷியல் மீடியாவில் பரவ விட்டார். ஆனால் அதை பார்க்கும் போதே செயற்கையாக இருக்கிறது என்று பலருக்கும் தெரிந்து விட்டது. சொல்லப்போனால் உண்மையில் பிள்ளைகளுக்கு அப்பாவுடன் இருப்பது தான் ரொம்பவும் பிடித்துள்ளதாம்.

அதற்கு ஏற்றார்போல் சூப்பர் நடிகரும் தன் மகளை அழைத்து பிள்ளைகளுடன் நேரத்தை செலவிடும் படி கண்டித்துள்ளார். இதையெல்லாம் பார்த்த மனைவி பிள்ளைகளை கணவருடன் அனுப்ப மறுத்து விட்டாராம். இதனால் அதிர்ந்து போன விவாகரத்து நடிகர் பலமுறை கேட்ட பிறகே சில கண்டிஷன்கள் போட்டு பிள்ளைகளை அவர் அனுப்பி வைத்தாராம்.

அதாவது நடிகர் பிள்ளைகளுடன் இருக்கும்போது எடுக்கும் போட்டோவை சோஷியல் மீடியாவில் வெளியிடக்கூடாது என்று கறாராக சொல்லிவிட்டாராம். இதனால் நொந்து போன நடிகர் பிள்ளைகளின் மேல் இருக்கும் பாசத்தால் வேறு வழியில்லாமல் சரி என்று சம்மதித்துள்ளாராம். இப்படி ஒரு பரிதாப நிலையில் இருக்கும் அவரைப் பற்றிதான் தற்போது திரையுலகில் பேசப்பட்டு வருகிறது.

Trending News