டூ பீஸில் ஆட்டம் போட ஒரு கோடி சம்பளம் கேட்ட நடிகை.. தெறித்து ஓடிய தயாரிப்பாளர்

பாலிவுட்டில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து பிரபலமாக இருப்பவர் அந்த நடிகை. தற்போது இவர் ஒரு தமிழ் திரைப்படத்திலும் கமிட்டாகி இருக்கிறார். மேலும் தமிழ் மொழி திரைப்படங்களில் நடிப்பதற்கு நடிகை மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார்.

இதற்கு ஒரு காரணமும் இருக்கிறது. ஏனென்றால் நடிகை நடிக்கும் போதே அவருக்கு தமிழில் ஏராளமான ரசிகர்கள் இருந்தனர். இதில் அவர் நேரடி தமிழ் படங்களில் நடிக்கப் போகிறார் என்பதும் அவருடைய ரசிகர்கள் கூட்டம் படம் எப்போது வெளியாகும் என்று காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதனால் அந்த நடிகை தமிழில் எப்படியாவது ஒரு ரவுண்ட் வந்து விட வேண்டும் என்று ஆர்வமாக இருக்கிறார். இந்த நடிகையை ஒரு தயாரிப்பாளர் சமீபத்தில் அணுகியுள்ளார். வரவிருக்கும் ஒரு புதிய படத்தில் நடிகை ஒரு குத்தாட்டம் போட வேண்டும் என்று அவர் கேட்டுள்ளார்.

கதையை கேட்ட நடிகையும் அந்த பாடலுக்கு குத்தாட்டம் போட சம்மதித்துள்ளார். ஆனால் அங்கு தான் விஷயமே இருக்கிறது. ஏனென்றால் நடிகை தயாரிப்பாளரிடம் ஒரு பாடலுக்கு ஆடுவதற்கு ஒரு கோடி சம்பளம் வேண்டும் என்று கேட்டிருக்கிறார்.

இதனால் அதிர்ந்து போன தயாரிப்பாளர் என்ன செய்வது என்று தெரியாமல் தெறித்து ஓடியுள்ளார். சமீபத்தில் கூட சமத்து நடிகை பிரபல நடிகருடன் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கினார்.

இது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைப் பார்த்துதான் நடிகையும் இவ்வளவு சம்பளம் கேட்கிறார் என்று தற்போது திரை உலகினர் பேசி வருகின்றனர்.

பொழுதுபோக்கு

புகைப்படங்கள்