சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

அந்த மாதிரி கூட நடிக்க தயார்.. வாய்ப்புக்காக ஆஃபர்களை அள்ளி வீசும் சேச்சி

இப்போதெல்லாம் எந்த மாதிரியான கதாபாத்திரமாக இருந்தாலும் நடிகைகள் நடிக்க தயங்குவது கிடையாது. ஏனென்றால் சில எசகு பிசகான கதாபாத்திரங்களில் நடிக்கும் போது அவர்களுக்கு கை மேல் பலன் கிடைக்கிறது.

அதாவது ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் என்பது போல் பப்ளிசிட்டி, காசு என இரண்டுமே கிடைத்து விடுகிறது. அதனாலேயே தற்போது டாப் நடிகைகள் கூட ஏடாகூடமான கதாபாத்திரங்களுக்கு யோசிக்காமல் ஓகே சொல்லி விடுகின்றனர்.

அப்படித்தான் அக்கட தேசத்தில் கவர்ச்சியில் கலக்கி வரும் சேச்சியும் தற்போது ஓப்பன் ஸ்டேட்மென்ட் ஒன்றை கொடுத்துள்ளார். கவர்ச்சியாக மட்டுமல்லாமல் பிகினி, ஆடை இல்லாமல் நடிப்பது போன்ற எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் எனக்கு ஓகே தான் என கூறியிருக்கிறார்.

Also read: பெத்தவங்கள விட காதல் தான் முக்கியம்.. இளம் நடிகருடன் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருக்கும் டிவி நடிகை

நல்லா கதாபாத்திரமாக இருந்து கதைக்கு தேவை என்றால் நான் எப்படி வேண்டுமானாலும் இறங்கி நடிக்க தயார் என்று அவர் கூறியிருப்பது ஆச்சரியப்படுத்தி இருக்கிறது. வாய்ப்புக்காக இந்த அளவுக்கு ஆஃபர்களை அள்ளி வீசும் நடிகைக்கு தற்போது நல்ல பலன் கிடைத்திருக்கிறது.

அதாவது நடிகையை தேடி தற்போது சில வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறதாம். ஆனால் அவசரப்பட்டு எதையும் ஏற்கக்கூடாது என முடிவெடுத்துள்ள நடிகை கதையில் தீவிர ஆர்வம் காட்டி வருகிறாராம். விரைவில் சேச்சியை போல்டான ஒரு கேரக்டரில் பார்க்கலாம் என்கிறது திரையுலக வட்டாரம்.

Also read: எக்ஸ் புருஷன் மீது பழியை தூக்கி போட்ட மனைவி.. நொண்டிக்குதிரைக்கு சறுக்குனது தான் சாக்கு

Trending News