வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

காதல் கணவரால் ஏற்பட்ட மன உளைச்சல்.. மாமியாரின் டார்ச்சரால் விவாகரத்துக்கு ரெடியாகும் நடிகை

Gossip: ஒரு காலத்தில் புகழின் உச்சியில் இருந்த நடிகை இப்போதும் ரசிகர்களின் ஃபேவரைட் தான். ஆனால் சில வருடங்களுக்கு முன்பு வரை தனக்கே உரிய அந்த அழகோடு வலம் வந்த நடிகை இப்போது அடையாளம் தெரியாத அளவுக்கு மாறி போயிருக்கிறார்.

அழகுக்கு பெயர் போன இந்த நடிகை தற்போது உடல் எடை அதிகரித்து காணப்படுகிறார். இது பார்ப்பவர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தாலும் நடிகைக்கு வயதாகி விட்டதால்தான் இப்படி இருக்கிறார் என கடந்து போனார்கள்.

ஆனால் சமீப காலமாக நடிகை தீவிர மன அழுத்தத்தில் இருப்பதாகவும் அதற்காக சில மருந்துகளை எடுத்துக் கொள்வதாகவும் பாலிவுட் பக்கம் பேசி வருகின்றனர். இதற்கு முக்கிய காரணம் அவருடைய கணவரும் மாமியாரும் தான்.

திருமணம் ஆனதிலிருந்தே நடிகைக்கும் மாமியாருக்கும் முட்டலும் மோதலும் ஆக தான் இருந்தது. ஆனால் எப்படியோ நடிகை அதையெல்லாம் சமாளித்து வந்தார். ஆனால் காதல் கணவர் சமீப நாட்களாக மனைவியிடம் முகம் கொடுத்து கூட பேசுவதில்லையாம்.

மன அழுத்தத்தில் தவிக்கும் நடிகை

இருவரும் மகளுக்காக மட்டுமே அனுசரித்து வாழ்ந்து வருகின்றனர். இதில் மன உளைச்சலும் சேர்ந்து நடிகையின் தோற்றமும் மாறிவிட்டது. இதை மாமியாரும் குத்தலாக பேசி வருகிறாராம்.

இதனால் நொந்து போன நடிகை தற்போது புகுந்த வீட்டுக்கு பெரிய கும்பிடாக போட்டுவிட்டு தன் மகளை அழைத்துக் கொண்டு பெற்றோருடன் வசித்து வருகிறார். விரைவில் இந்த ஜோடியின் விவாகரத்து செய்தி வெளியாகும் என கூறப்படுகிறது.

ஆனால் நடிகையின் கணவரோ மகள் வளர்ந்து செட்டிலான பிறகு சட்டபூர்வமாக பிரிந்து விடலாம் என்ற நினைப்பில் இருக்கிறாராம். அதுவரை இந்த ஜோடி தனித்தனியாக இருக்க முடிவெடுத்துள்ளதாக ஒரு அதிர்ச்சி தகவல் கசிந்துள்ளது.

காதல் கணவரை விட்டு பிரியும் நடிகை

Trending News