வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

காதலும் வேண்டாம் கல்யாணமும் வேண்டாம்.. 48 வயதாகியும் முதிர் கன்னியாக இருக்கும் நடிகை

Gossip: உலக அளவில் புகழ்பெற்ற அந்த நடிகை 48 வயதான நிலையிலும் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வருகிறார். ஒரு காலத்தில் ரொம்பவும் பிசியாக நடித்து வந்த சமயத்தில் இவர் தன்னை விட வயது குறைந்த நடிகர் ஒருவரை காதலித்து வந்தார்.

நெருங்கிய ரிலேஷன்ஷிப்பில் இருந்த அவர்கள் சில வருடங்களிலேயே நீ யாரோ நான் யாரோ என பிரேக்கப் செய்து பிரிந்தனர். அதன் பிறகு நடிகையும் நடிப்பிலிருந்து விலகினார். இதற்கு முக்கிய காரணம் அவருடைய உடல்நல பிரச்சனை தான்.

அதன் பிறகு சில வருடங்கள் சிகிச்சை பெற்று வந்த நடிகை திருமணம் செய்து கொள்ளாமல் 2 குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வந்தார். ஆனால் சமீபத்தில் நடிகை பிரபலம் ஒருவருடன் டேட்டிங் சென்றது வைரலானது.

திருமணத்தை வெறுக்கும் நடிகை

எப்படியோ அவர் திருமணம் செய்து கொண்டால் சரிதான் என பலரும் அவருக்கு வாழ்த்து சொன்னார்கள். ஆனால் இப்போது பார்த்தால் அந்த உறவும் நீடிக்கவில்லையாம்.

தன்னுடைய பாய் ஃபிரண்டை பிரேக்கப் செய்துள்ள நடிகை இனி திருமணமே வேண்டாம் என்று முடிவுக்கு வந்துவிட்டாராம். இது பற்றி கேட்டால் காதலாவது கத்திரிக்காய் ஆவது என தத்துவம் பேசுகிறாராம்.

இப்படி நடிகை நொந்து போகும் அளவுக்கு என்ன தான் நடந்திருக்கும் என்ற பேச்சும் ஒரு பக்கம் கிளம்பியுள்ளது. ஆனால் நடிகை தன் குழந்தைகள் மட்டும் போதும் இனி எந்த உறவும் வேண்டாம் என முடிவெடுத்து தனிமையில் இனிமை கண்டு வருகிறாராம்.

காதலித்து நொந்து போன நடிகை

Trending News