Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

படுக்கையறை காட்சியால் குவியும் பட வாய்ப்பு .. சம்பளத்தை தாறுமாறாக ஏற்றிய பிரபல நடிகை

தமிழில் பல வெற்றித் திரைப்படங்களில் நடித்து முன்னணியில் இருப்பவர் அந்த பிரபல நடிகை. நடிகையிடம் அழகு மட்டுமல்ல அழகான குரல் வளமும் இருக்கிறது. இதனால் சினிமாவில் பல திரைப்படங்களில் இவர் பாடலையும் பாடியிருக்கிறார். தற்போது நடிகை பிரபல இயக்குனரின் […]

தமிழில் பல வெற்றித் திரைப்படங்களில் நடித்து முன்னணியில் இருப்பவர் அந்த பிரபல நடிகை. நடிகையிடம் அழகு மட்டுமல்ல அழகான குரல் வளமும் இருக்கிறது. இதனால் சினிமாவில் பல திரைப்படங்களில் இவர் பாடலையும் பாடியிருக்கிறார்.

தற்போது நடிகை பிரபல இயக்குனரின் ஒரு திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சமீபகாலமாக பல நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகை இந்த படத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு கவர்ச்சியிலும் குதித்துள்ளார்.

அப்படி வெளியான சில போட்டோக்களும் பரபரப்பை கிளப்பியது. அதுமட்டுமல்லாமல் நடிகை இதற்கு முந்தைய சில திரைப்படங்களிலும் படுக்கை அறை காட்சிகள் என்று மிகவும் தாராளமாக நடித்திருந்தார். இதனால் தான் அவரை தேடி தற்போது அதே மாதிரி வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறதாம்.

இருப்பினும் நடிகை கதைக்கு முக்கியத்துவம் இருந்தால் அப்படி நடிக்க தயாராகவே இருக்கிறார். இதனால்தான் நடிகை சமீபத்தில் நடித்துக்கொண்டிருக்கும் படத்தில் கூட ரொம்பவும் கவர்ச்சியாக நடித்திருக்கிறார் என்று ஒரு பேச்சு அடிபடுகிறது. அதோடு அவர் இந்தப் படத்தை ரொம்பவும் எதிர்பார்க்கிறாராம்.

தற்போது நடித்துக்கொண்டிருக்கும் இந்த திரைப்படத்தில் 70 லட்சம் சம்பளம் வாங்கும் நடிகை இனி அடுத்த படங்களில் அதை ஒரு கோடி ரூபாயாக மாற்ற திட்டமிட்டுள்ளார். அதனால் தன்னிடம் கதை சொல்ல வரும் இயக்குனர்களிடம் நடிகை ஒரு கோடி சம்பளம் வேண்டும் என்று கறாராக சொல்கிறாராம்.

ஏன் சம்பளத்தை ஏற்றி விட்டார்கள் என்று யாராவது கேட்டால் நடிகைக்கு உடனே கோபம் வந்து விடுகிறதாம். ஆனாலும் அவர் தன் சம்பள விஷயத்தில் இறங்கிப் போக கூடாது என்ற முடிவில் இருக்கிறாராம்.

V

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.