புதன்கிழமை, ஜனவரி 8, 2025

வடிவேலு ஒரு நச்சு பாம்பு.. நல்லா நடிச்சதால பறிபோன வாய்ப்பு, குமுறும் நடிகை

Vadivelu’s Real Face: தன்னை தாழ்த்திக் கொண்டு மற்றவர்களை சிரிக்க வைத்த வடிவேலுவுக்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசிகர்கள் இருக்கின்றனர். அப்படி ஒரு வெற்றியைப் பெற்று தனக்கான இடத்தை பிடித்த இவருக்கு இன்னொரு கோர முகமும் இருக்கிறது.

அதாவது தன்னைவிட யாரும் முன்னேறி சென்று விடக்கூடாது என்ற பொறாமை குணம் தான். தன்னுடன் நடிப்பவர்கள் தனக்கு கீழேயே அடிமைகளாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் இவர் செய்த அக்கப்போர் கொஞ்ச நெஞ்சம் கிடையாது. இதை பல பிரபலங்கள் வெளிப்படையாகவே கூறி வருகின்றனர்.

அது மட்டுமல்லாமல் தன்னுடன் நடித்த சக நடிகர்களின் மரணத்திற்கு கூட வராத இவர் விஜயகாந்த் இறப்பில் நடந்து கொண்ட முறை விமர்சனம் ஆனது. அப்படிப்பட்ட வடிவேலு ஒரு நச்சு பாம்பு என காமெடி நடிகை ஆர்த்தி ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். வைகை புயலுடன் இணைந்து பல படங்களில் நடித்திருக்கும் இவர் ஒரு முறை அவர் படத்தில் நடிக்க கமிட்டாகி இருக்கிறார்.

Also read: 300 படங்கள் நடித்த போண்டாமணி சேர்த்து வைத்த சொத்து.. திரும்பி கூட பார்க்காத வடிவேலு

அப்போது அவருடைய நடிப்பை பார்த்த வடிவேலு ஆஹா ஓகோ என புகழ்ந்து தள்ளி இருக்கிறார். இங்கு அவரை பாராட்டி விட்டு அப்படியே இயக்குனரிடம் சென்று அந்த பொண்ணு என்ன விட நல்லா நடிக்குது. அதனால இந்த படத்தில் இருந்து தூக்கிடுங்க என தன் ஒரிஜினல் முகத்தை காட்டி இருக்கிறார்.

இதனால் அந்த பட வாய்ப்பு ஆர்த்தியிடமிருந்து கைநழுவி போயிருக்கிறது. இப்படி பல வாய்ப்புகளை இழந்ததாக அவர் கூறியிருக்கிறார். அது மட்டுமல்லாமல் அவருடைய கணவர் கணேஷ் கூட வடிவேலுவால் பாதிக்கப்பட்டிருக்கிறார். சூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்து மேக்கப் போட்ட பிறகு கூட கணேஷை வேண்டாம் என்று வடிவேலு அனுப்பி வைத்தாராம்.

ஆனால் வெளியில் தன்னை நல்லவராக காட்டிக் கொள்ளும் அவர் இதைவிட நல்ல வாய்ப்பு உனக்கு இருக்கு என கூறி அனுப்பி விடுவாராம். இதைப் பற்றி கூறியுள்ள ஆர்த்தி பாம்பு எப்படி விஷமாக இருக்குமோ அதே போல் தான் வடிவேலுவும். அதை மாற்ற முடியாது. அப்படியே விட்டு விட வேண்டியது தான் என தெரிவித்துள்ளார்.

Also read: சிவகார்த்திகேயனை நம்பி மோசம் போன இளம் காமெடி நடிகர்.. பாதி வடிவேலுவாய் மாறிய SK

Trending News