ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 29, 2024

எக்கு தப்பாக முத்தம் கொடுத்த ஹீரோ.. சூட்டிங் ஸ்பாட்டிலேயே கன்னத்தை பழுக்க வைத்த எவர்கிரீன் நடிகை

Gossip: இப்போது இருக்கும் ஹீரோயின்கள் கதைக்கு தேவை என்றால் எப்படி வேண்டுமானாலும் நடிக்க சம்மதம் சொல்லி விடுகின்றனர். ஆனால் 80 காலகட்டத்தில் இருந்த நடிகைகள் தங்களுக்கு என ஒரு கொள்கையை வைத்து தான் நடித்தார்கள்.

அதில் அந்த எவர்கிரீன் நடிகை முத்த காட்சி, நெருக்கமான காட்சி போன்ற எதிலும் நடிக்க மாட்டார். இந்த கண்டிஷனை சொல்லி தான் அவர் படங்களில் நடிக்க கமிட் ஆவார். இதுவரை அவர் நடித்த படங்களில் ஓவர் ரொமான்ஸ் காட்சிகள் எதுவுமே இருந்தது கிடையாது.

அப்படிப்பட்ட நடிகை மிகப்பெரும் இயக்குனர் ஒருவரின் படத்தில் நடிக்க சம்மதித்தார். அப்படத்தில் ஹீரோவாக நடித்தது இன்று உச்சத்தில் இருக்கும் நடிகர் தான். ஆனால் அந்த நடிகரின் படங்களில் ரொமான்ஸ் தலைவிரித்தாடும்.

நடிகைக்கு முத்தம் கொடுத்த ஹீரோ

அதனால் நடிகை இதையெல்லாம் கேட்டு தெரிந்து கொண்டு தான் நடிக்க சம்மதித்திருக்கிறார். இயக்குனரும் எந்த நெருக்கமான காட்சிகளும் கிடையாது என்று சொல்லி இருக்கிறார். இப்படியே சில நாட்கள் சூட்டிங் சென்று இருக்கிறது.

ஒரு நாள் ஹீரோவுடன் இணைந்து நடிக்கும் காட்சி படமாக்கப்பட்டு இருக்கிறது. அப்போது எதிர்பாராத விதமாக ஹீரோ நடிகைக்கு முத்தம் கொடுத்து இருக்கிறார். உண்மையில் அப்படி ஒரு ஷாட் இருந்ததாம்.

ஆனால் திடீரென இப்படி ஒரு காட்சியை எடுத்தால் இயல்பாக இருக்கும் என இயக்குனர் நடிகையிடம் சொல்லாமல் விட்டிருக்கிறார். இதனால் கடுப்பான நடிகை ஹீரோவை கன்னம் பழுக்கும் அளவுக்கு அறைந்திருக்கிறார்.

இந்த சம்பவத்தால் அந்த இடமே ரணகளமாக மாறி இருக்கிறது. அதை அடுத்து நடிகை படத்திலிருந்து விலகி இரண்டெழுத்து நடிகை ஒப்பந்தம் செய்யப்பட்டார். மேலும் இந்த சம்பவத்திற்கு பிறகு நடிகை அந்த ஹீரோவுடன் எந்த படத்திலும் நடிக்கவில்லை என்பது கூடுதல் தகவல்.

டாப் ஹீரோவை அடித்த நடிகை

Trending News