திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

பயில்வானுக்கு சப்போர்ட்டாக இறங்கிய வாரிசு நடிகை.. அவர் பண்றது தான் சரி

பயில்வான் ரங்கநாதன் பல வருடங்களாக சினிமா துறையில் பணியாற்றி வருகிறார். இதுதவிர பத்திரிகையாளராகவும் பணிபுரிந்துள்ளார். இந்நிலையில் தற்போது யூடியூப் சேனல் வாயிலாக நடிகர், நடிகைகள் என பாரபட்சம் பார்க்காமல் அனைவரையும் விமர்சித்து வருகிறார்.

அவர்களின் அந்தரங்க விஷயங்களை பயில்வான் வெளிப்படையாக சொல்வதால் இவரது யூடியூப் சேனலுக்கு ஏகப்பட்ட ஃபாலோவர்ஸ் உள்ளனர். ஆனால் தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர், நடிகைகள் என பலரும் இவரது யூடியூப் சேனலுக்கு கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர்.

சமீபத்தில் பாடகி சுசித்ரா பற்றி பயில்வான் அவதூறாக பேசிய வீடியோ ஒன்று வெளியாகி இருந்தது. இதனால் சுசித்ரா தொலைபேசி வாயிலாக பயில்வானை கண்டபடி திட்டியிருந்தார். மேலும் சுசித்ரா இதில் சம்பந்தப்பட்டவர்கள் தனுஷ், வெங்கட் பிரபு, கார்த்திக் குமார் என அவர்கள் மீது வழக்கும் தொடர்ந்துள்ளார்.

இந்நிலையில் ஒரு ஊடகத்தில் பிரபல நடிகை லட்சுமியின் மகளான ஐஸ்வர்யாவிடம் பயில்வானை பற்றி கேட்டுள்ளனர். அதற்கு பதிலளித்த ஐஸ்வர்யா, ஒரு ரிப்போர்ட்டரின் வேலைதான் அது, அதைத்தான் அவர் செய்கிறார். மேலும் பொது வாழ்க்கைக்கு வந்து விட்டால் நல்லதும் பேசுவார்கள், கேட்டதும் பேசுவார்கள்.

அதனால் அவை எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் வந்துவிட வேண்டும். அப்போதுதான் நம்மால் நிம்மதியாக இருக்க முடியும் இல்லையென்றால் நாலு தூக்க மாத்திரை போட்டாலும் தூக்கம் வராமல் மன அழுத்தம் ஏற்படும். நானும் ராமராஜனுடன் இணைந்து ஊரெல்லாம் உன் பாட்டு படத்தில் நடித்து இருந்தோம்.

அப்போது ஒருவர் ஐஸ் வரியா என கேட்டார். அந்தக் காலத்திலேயே எனக்கு அப்படி நடந்தது. திருமணமான பெண் நன்றாக புடவை உடுத்தி ரோட்ல போனா கூட, யார பாக்க இப்படி மினிக்கி கொண்டு போறா என்ற சொல்லும் சமூகம் இது. அந்த சமூகத்தில் தான் நாமும் வாழ்கிறோம், அதனால் யார் சொன்னாலும் அதை காதில் வாங்காமல் சென்று கொண்டே இருக்கவேண்டும் என கூறியுள்ளார். இவ்வாறு ஐஸ்வர்யா பயில்வானுக்கு ஆதரவாக பேசுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending News