வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

நயன்தாராவின் இடத்தை பிடிக்கும் விவாகரத்து நடிகை.. கல்யாணத்திற்கு பின் விழும் முதல் அடி

சினிமாவில் நடிக்கும் எல்லா நடிகைகளுக்கும் ஏதாவது ஒரு சூழ்நிலையில் சறுக்கல்கள் இருக்கத்தான் செய்யும். இது அனைத்து முன்னணி ஹீரோயின்களுக்கும் பொருந்தும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் அதை பயன்படுத்திக் கொண்டு மற்ற நடிகைகள் போட்டி போட்டு அந்த இடத்தை அடைய நினைப்பார்கள்.

அப்படி ஒரு சம்பவம் தான் தற்போது நயன்தாரா விஷயத்திலும் நடந்துள்ளது. இயக்குனர் விக்னேஷ் சிவனை பல வருடங்களாக காதலித்து வந்த நயன்தாரா சமீபத்தில் ஊர் அறிய மிகவும் கோலாகலமாக அவரை திருமணம் செய்து கொண்டார்.

ஒரு நடிகைக்கு திருமணம் ஆகி விட்டாலே சினிமாவில் வாய்ப்புகள் குறைய ஆரம்பித்து விடும். அதை நன்றாக தெரிந்து கொண்ட நடிகை சமந்தா தற்போது நயன்தாராவின் நம்பர் ஒன் இடத்தை பிடிப்பதற்கு பெரும் முயற்சி செய்து வருகிறார். அதற்காக அவர் சில திட்டங்களையும் போட்டு செயல்படுத்திக் கொண்டிருக்கிறாராம்.

இதனால் நயன்தாராவுக்கு கிடைக்க இருந்த பல வாய்ப்புகள் சமந்தாவுக்கு செல்வதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. திரையுலகில் அதிகபட்ச சம்பளம் வாங்கும் நடிகையாக நயன்தாரா இருக்கிறார். தற்போது அவரையே ஓவர்டேக் செய்யும் அளவுக்கு சமந்தா தன்னுடைய சம்பளத்தை ஏற்றி இருக்கிறார்.

இருப்பினும் அவருக்கு வாய்ப்புகள் குவிந்து கொண்டிருக்கிறதாம். இதன் மூலம் ஏகப்பட்ட படங்களை கைவசம் வைத்திருக்கும் சமந்தா அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு வேறு எந்த படத்துக்கும் தேதி கொடுக்க முடியாத அளவுக்கு பிஸியாக இருக்கிறாராம்.

அது மட்டுமல்லாமல் டாப் நடிகர்களின் பட வாய்ப்பு என்றால் சம்பளத்தில் அட்ஜஸ்ட் செய்யவும் அவர் தயாராக இருக்கிறாராம். இதனால் தான் தற்போது அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து கொண்டிருப்பதாக திரையுலகில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

அந்த வகையில் நயன்தாராவுக்கு திருமணத்திற்கு பின் விழுந்த முதல் அடி இதுவாகத்தான் இருக்க முடியும். இதிலிருந்து அவர் மீண்டு வருவாரா என்பதையும், தன்னுடைய நம்பர் ஒன் இடத்தை தக்க வைத்துக்கொள்ள அவர் என்ன செய்யப் போகிறார் என்பதையும் காண திரையுலகில் பலரும் ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Trending News